Muslim History

சர்வதேசத்தின் அழுத்தம் – மியன்மார் அரசு அடிபணியுமா?

மியன்மார்
சர்வதேசத்தின் அழுத்தம் - மியன்மார் அரசு அடிபணியுமா?

மியன்மாரில் ரோஹிஞ்சியா முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான அடக்கு முறைகளும் இனஅழிப்பு வன்முறைகளும் பிரயோகிக்கப்பட்ட நிலையில் பல நாட்களாகியும் மியன்மார் அரசு தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உட்பட சர்வதேச அமைப்புகள் மியன்மார் அரசை குற்றஞ்சாட்டின.

இது தொடர்பாக சமாதானத்திற்கான நோபல் பரிசினைப் பெற்ற மியன்மார் நாட்டின் தலைவர் ஆங் சாங் சூ கி எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நோபல் பரிசினையும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது.

இந்நிலையில் மியன்மார் தலைவர் ஆங் சாங் சூ கி, ஆசியான் எனப்படும் தென் கிழக்குஆசிய நாடுகளின் வெளியுற அமைச்சர்கள் பங்கு கொள்ளும் கூட்டத்தை கூட்டுகிறார்.

மியன்மார் ராணுவமும் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அண்டை நாடுகளும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்ற அமைப்பும் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

To Top