Muslim History

துருக்கியில் ரஷ்ய தூதுவர் ஏன் கொல்லப்பட்டார்? – One வரி Report

Russian Ambassador to Turkey
துருக்கியில் ரஷ்ய தூதுவர் ஏன் கொல்லப்பட்டார்? - One வரி Report

துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் 19/12/2016 சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பற்றிய  நிழ்வுமேடையின் one வரி report.

# Dec.19.2016

# அண்ட்ரே கார்லோவ் (Andrey Karlov) துருக்கிக்கான ரஷ்ய தூதுவர்.

# வயது 62

# இவர் 1980-களின் பெரும்பாலான காலத்தை, வடகொரியாவுக்கான சோவியத் ஒன்றியத்தின் தூதராகப் பணியாற்றினார்.

# 1991-ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, தென் கொரியாவுக்கான ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்ட இவர், 2001-ல் வடகொரியாவுக்கான ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்டார்.

# 2013-ல் துருக்கிக்கான தூதராக நியமிக்கப்பட்ட அவர், ரஷ்ய ஜெட் விமானத்தை சிரியா எல்லையில் துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராஜாங்க ரீதியிலான மோதல்களைக் கையாள வேண்டிய முக்கியப் பொறுப்பு அவருக்கு ஏற்பட்டது.

# துருக்கியின் தலைநகரான அங்காராவில் ‘துருக்கியர் பார்வையில் ரஷ்யா’ என்ற புகைப்படக் கண்காட்சியினைத் திறந்து வைத்து உரையாடிக்கொண்டிருக்கும்போது சுடப்பட்டார்.

# துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

# பலர் காயமடைந்துள்ளனர்

# துப்பாக்கியால் 8 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

# இதேவேளை துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்தமையை ரஷ்ய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதை “பயங்கரவாத நடவடிக்கை” என வர்ணித்துள்ளது.

# துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர்  22 வயதான  அங்காராவில் காவல்துறைப்பிரிவில் தொழில்புரிபவர்.

# இவர் அலெப்போவை (Aleppo) மறக்காதே , சிரியாவை மறக்காதே என கோசமிட்டபடி துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்.

# பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் மரணம்.

# பொலிஸ் அடையாள அட்டையுடன் கூட்டத்தில் புகுந்து, மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

# ரஷ்யா, சிரிய அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு அலெப்போவை தாக்குவதற்கு துருக்கிய பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு பல கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தனர்.

# மாஸ்கோவில்  ரஷியா, ஈரான், மற்றும் துருக்கி வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் சிரியா குறித்து விவாதிக்க இருந்த நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

# அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, பிரிட்டன் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்ஸன், பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஒல்லாந்த் உள்ளிட்ட தலைவர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளனர்.

இத்துப்பாக்கி பிரயோகத்தின் நேரடி காட்சியினை கீழே காணலாம். பலவீனமார்கள் பார்வையிட வேண்டாம்.

To Top