Technology

Pokémon விளையாடுபவர்கள் பள்ளிவாசல்களுக்கு வருகின்றார்கள்

Pokémon

ஒவ்வொரு காலகட்டத்திலும் இலத்திரனியல் சாதனங்களின் கைதியாகவே மனிதன் இருந்து வருகின்றான். அதிலும் ஸ்மார்ட் போன்கள்தான் மனிதர்களை அடக்கி ஆள்வதில் முன்னணி வகிக்கின்றது. இந்தவகையில் தற்போது Pokemon Go எனும் App க்கு மேலை நாட்டு இளைஞர்கள் திரள் திரளாக அடிமைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Pokémon GO விளையாட்டைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உங்கள் ஸ்மார்ட் போன் அருகில் Pokémon உருவங்களை தோன்றச் செய்து அவைகளை உங்களைக் கொண்டு பிடிக்கவைப்பதே இவ் விளையாட்டாகும். நீங்கள் நகர்ந்து செல்ல செல்ல நீங்கள் இருக்குமிடம் நேரம் ஆகியவற்றை பொறுத்து வெவ்வேறு பொக்கேமொன் உருவங்கள் உங்கள் அருகில் தோன்றலாம்.

கடந்த ஜுலை 6ம் திகதி பொக்கேமொன் அப்ப் குறிப்பிட்ட சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் மூன்று வாரங்களில் 75 மில்லியன் மக்கள் இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். இத்தொகை சுவிடன், போர்த்துகல் போன்ற நாடுகளின் சனத்தொகைக்கு ஒப்பானது.

இவ் விளையாட்டில் உள்ள விசித்திரம் என்னவென்றால், இவ் விளையாட்டை விளையாடுபவர்கள் பள்ளிவாசல்கள் போன்ற வணக்கஸ்தளங்கள் அடங்கலான அனைத்து இடங்களிலும் Pokémon  உருவங்களை காண வாய்ப்புள்ளது.

சில மேற்கு நாடுகளில், இளைஞர்கள் Pokemon விளையாட்டை விளையாடும் போது, Pokemon உருவங்கள் பள்ளிவாசல்களிலும் தோன்றியிருக்கின்றது. இந்தத் தோற்றப்பாடு பல்வேறு கேள்விகளையும் தோற்றுவித்திருக்கின்றது. இதனை டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்கள்.

 

ஐரோப்பா மற்றும் மேற்கு நாடுகளைப் பொறுத்த மட்டில் Islamophobia அல்லது Muslimophobia என்கின்ற இஸ்லாத்திற்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவம் ஒருபுறம் வளர்ந்து வருகின்றது. இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால், இளைய சமுகத்தைப் பொறுத்தவரைக்கும் பக்குவத்தையும் நிதானப் போக்கினையும் ஒப்பீட்டளவில் எதிர்பார்த்திட முடியாது. எனவேதான் பொதுவாக சமய முரண்பாடுகளின் கருவிகளாக இளைய சமூகத்தினரை முரண்பாட்டுவாதிகள் இலகுவாக கையாண்டு விடுகின்றனர்.

இந்தவகையில் Pokemon App இளைஞர்கள் மத்தியில், அதுவும் பள்ளிவாசல்களை அண்மித்த செயற்பாடுகள், எதிர்காலத்தில் விரும்பத் தகாத நிலைமைகளை ஏற்படுத்திவிடுமோ என்கின்ற விடயம் கருத்தாடல்களுக்கு உட்படுத்த வேண்டியதொன்றாகும்.

இதில் வேதனைக்குரிய விடயமொன்றும் இருக்கின்றது. தொழுகைக்காக பள்ளிவாசல்களின் அமைவிடங்களை மற்றும் இஸ்லாமிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தெரிந்து கொள்வதற்காக Islamic GPS APP போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ஈமானியர்களின் கைகளில், Pokemon ஷைத்தானியத்தாக வலம்வந்துவிடக்கூடாது! என்கின்ற வேதனைதான் அது.

இவ் விளையாட்டு மக்களை பள்ளிவாசலுக்குச் செல்ல தூண்டினால், அது ஒரு சரியான செயலாகவிருக்குமா? உங்களின் கருத்துக்களை ஏனையோருடன் பகிருங்கள்.

1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top