Muslim History

மோட்டார் பைசிக்களில் உலகை வலம் வந்த முஸ்லிம் பெண்.

மலேசியாவைச் சேர்ந்த அனிதா யூசுப் (Anita Yusof,49)  என்ற முஸ்லிம் பெண் மோட்டார் பைசிக்கள் மூலம் உலகை வலம் வந்து வித்தியாசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கின்றார்.

கல்வி நிறுவனம் ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரியும் அனிதா யூசுப்பை அவரது சக விரிவுரையாளர்களும் மாணவர்களும் மிகுந்த கோலாகலத்துடன் வரவேற்பளித்துள்ளனர்.

தனது இந்தப் பயணத்தில் பல மறக்க முடியாத சம்பவங்களையும் அனுபவங்களையும் பெற்றுக் கொண்டதாகவும், அவற்றினை நூல் வடிவில் வெளிக்கொணர உள்ளதாகவும் அனிதா குறிப்பிட்டார்.

“இஸ்லாமோபியா உணர்வுக்கு ஆட்பட்டவர்களுக்கு, முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படவுமில்லை, பாரபட்சத்திற்குள்ளாகவுமில்லை” என்ற செய்தியை உலகிற்கு கொண்டு செல்லவே இத்தகைய முயற்சியில் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகின்றார்.

40 நாடுகளைச் சுற்றி வந்த இவரது பயணம்  65,369 km தூரத்தினைக் கொண்டதாகும்.

கடந்த வருடம் செப்டம்பர் 13 ஆம் திகதி ஆரம்பித்த இவரது பயணம், இவ் வருடம் செப்டம்பர் 16 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது.




Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top