Muslim History

இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித் – பழமைவாய்ந்த பள்ளிவாசல்

இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித்
இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித் - பழமைவாய்ந்த பள்ளிவாசல்

இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித் என்பது பன்முக நிறுவனமாக விளங்கி வந்தமையை வரலாற்றில் நாம் அறிந்திருப்போம்.

வணக்கஸ்த்தளம் என்ற ஒரு அமைப்பாக மட்டும் மஸ்ஜித்கள் காணப்படவில்லை. கல்விக்கூடமாக, நூலகமாக, வைத்தியசாலையாக, நலன்புரி அமைப்பாக இன்னும் பல பன்முகங்களைக் கொண்டதாக, இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித் பெற்றிருந்த வகிபாகத்தினை விளங்கி வைத்திருக்கின்றோம்.

ஆனால் இன்றைய மஸ்ஜித்கள் தோற்றத்தில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தை விட, சமூகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. தரைக்கு சலவைக் கற்களும், அடிக்கொரு மின்விளக்கும், சுற்றிவர மின் விசிறிகள் என்று டாம்பீகமாக மஸ்ஜித்கள் காட்சியளிக்கின்றன. அதே நேரம் உண்ணவும் உடுக்கவும் வசதியற்ற ஏழ்மையானவர்களும் இவ்வாறான அதி வசதிபடைத்த மஸ்ஜிதின் ஜமாஅத்தினராக இருந்து, ஐவேளை அப் பள்ளிவாசல்களிலேயே தொழுதும் வருகின்றனர். இந்த விடயத்தினையும் சில மஸ்ஜித்கள் திறன்பட அணுகிவருகின்றன என்பதும் மறுப்பதற்கில்லை.

மஸ்ஜித்களின் கட்டிடங்களைப் பொறுத்தவரை பழைய தோற்றத்தினை ஒரேயடியாக இடித்துத்தள்ளி, அதே இடத்தில் புதிய மஸ்ஜித்கள் நிர்மானிக்கப்படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இச் சந்தர்ப்பத்தில் அம் மஸ்ஜித்களின் தொன்மை அற்றுப்போகின்றது. அதாவது குறிப்பிட்ட இம் மஸ்ஜித் இத்தனை வருடகால வரலாற்றினைக் கொண்டது என்று கூறக்கூடிய தன்மையில் இருந்து விடுபட்டுப்போகின்றது. சனத்தொகையை கருத்தில் கொண்டு விஸ்தரிக்க நாடினால் பழைய கட்டிட தோற்றம் மற்றும் அமைப்புகளில் கவனம் செலுத்துதல் இன்றைய காலகட்டத்தில் அவசியமாகின்றது.

இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித் ஒன்றின் தொன்மையை படம் பிடித்துக்காட்டும் பள்ளிவாசல் ஒன்றே இது

இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித்

இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித்

இப் பள்ளிவாசல் 1400 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மேற்கு ஆபிரிக்காவில் Ghana வில் இப் பள்ளிவாசல் அமைந்துள்ளது.

இப் பள்ளிவாசலை புகைப்படம் எடுப்பதற்கு பள்ளிவாசலின் நிர்வாகிகள் முதலில் அனுமதிக்கவில்லை. பின்னர் இப்பள்ளிவாசலின் வரலாற்று முக்கியத்துவத்தினை உணர்த்தி இப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக இப் புகைப்படங்களை எடுத்தவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித்

இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித்

இப்பள்ளிவாசல் Larabanga Masjid என அழைக்கப்படுகின்றது. 1400 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப் பள்ளிவாசல் இப்ராஹிம் அய்யூபி அல்-அன்ஸாரி என்பவரால் கட்டப்பட்டதாகும். இவர் மதீனதுல் முனவ்வராவின் ஷேஹ் ஹினால் Gana வுக்கு அனுப்பப்பட்டவராவார்.

Larabanga பகுதில் காணப்படும் அதிக வெப்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் இப்பள்ளிவாசல் காணப்படுகின்றது. பள்ளிவாசலின் உட்பகுதி குளிர்மையாக உள்ளது. களிமண்னினால் கட்டப்பட்ட இப் பள்ளிவாசலின் கூரைகளை தாங்கி நிற்கும் மரக் குற்றிகள் அதிக வலிமையோடு அவற்றை தாங்கி நிற்கின்றன.

இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித்

இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித்

இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித்

இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித்

மொத்தத்தில் இப் பள்ளிவாசல் ஒரு வரலாற்றுப் பொக்கிசமாகும்.

மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top