Muslim History

வரலாற்றுச் சாதனையும் வாழ்த்துக்களும்..

Rohitha Dasanayaka
வரலாற்றுச் சாதனையும் வாழ்த்துக்களும்..

நண்பர் Rohitha Dasanayaka பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை கலாநிதி. அத்தோடு சிறந்த மனிதப் பண்பாட்டை உடையவர், தனது கல்வித்துறைசார் ஆய்வுகளுடன், புதிய பல ஆய்வுகளையும் சமூக நன் நோக்கம் கருதி மேற்கொள்பவர், அத்தோடு அவரது ஆய்வுகள் நடைமுறையுடன் இணைந்ததாகவும், இலங்கைச் சமூகங்களிடையே, ஒற்றுமையையும், புத்துணர்வையும் உண்டு பண்ணுவதாகவும் அமைந்திருப்பது அதன் சிறப்பு.

அந்தவகையில் இலங்கைக்கும் அறபுக்களுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்பு பற்றிய தனது ஆய்வை, நூல் வடிவமாக்கி, அதனைச் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார்.  கொடகே(ගොඩකෙ) பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல், இலங்கைக்கும் அறபுக்களுக்கும் இடையேயான பல்வேறு முக்கியமான தொடர்புகளையும், பல சுவாரசிய நிகழ்வுகளையும் குறித்து காட்டுகின்றது. இதனை தமிழ்மொழியில், மொழிபெயர்ப்பதும், அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியதும், முஸ்லிம்களின் சமூகக் கடமை, இது அவசரமாக மேற்கொள்ளப்படவும் வேண்டும்.

Rohitha Dasanayaka

Rohitha Dasanayaka

இந் நூலில், வரலாற்று மற்றும் தொல்லியல் ஆதாரங்களுடன் தனது கருத்துக்களை உறுதிப்படுத்தி இருக்கும் கலாநிதி Rohitha Dasanayaka, இவ் ஆய்வை, மேற்கொள்ளும்போதும், அதனை நூலாக வெளியிட முனையும் வேளையிலும் பல்வேறு சிரமங்களை அனுபவித்ததை அடிக்கடி என்னோடு பகிர்ந்துகொள்வார். அந்த வகையில் அவரது தொடர் முயற்சி பாராட்டுக்குரியது.

இன முறிவும், அடிப்படைவாத சிந்தனையிலான இயக்கவாதங்களும், எல்லாச் சமூகங்களிலும், மலிந்து கிடக்கும் இக்காலத்தில், தான் பிறந்த சமூகத்தையும் தாண்டி இன்னுமொரு சமூகத்தின் இருப்பிற்கான வேர்களைத் தேடி அவர் மேற்கொண்ட முயற்சியை, முஸ்லிம் சமூகம் பாராட்ட வேண்டிய கட்டாய கடமை உண்டு. இன்னும், அவரது வரலாற்று ஆய்வு நூலை வாங்கிப்படிப்பதும், அதனூடாக தாம் இதுவரை அறியாத வரலாற்று ஆதாரங்களை அறிந்து கொள்ளவும் இலங்கை முஸ்லிம் சமூகம் முயற்சிக்க வேண்டும்.

ஒரு சமூகம் தனது வரலாற்று இருப்பியலை, உறுதிப்படுத்தி ஆதாரங்களை முன்வைப்பது முக்கியமானதாயினும், அதனை இன்னுமொரு சமூகம்சார் புத்திஜீவித்துவ ஆய்வாளர், உறுதிப்படுத்துவது, இன்னும் பன்மடங்கு உறுதியானது. அந்தவகையில் “குமாரி ஜெயவர்த்தன” அவர்களுக்குப் பின் இலங்கை முஸ்லிம் இருப்பியல் வரலாற்றில் Dr. Rohitha, மேற்கொண்டிருக்கும் பணி, ஒரு புதிய தலைமுறைச் சாதனை என்றே கொள்ள முடியும்.

Rohitha Dasanayaka போன்றவர்களை முஸ்லிம் சமூகம் நன்கு பயன்படுத்திக்கொள்வதோடு, அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் ஊக்குவிப்பாக இருப்பது, எம் சமூகம்சார் இன்னும் பல ஆதாரங்களை வெளிக்கொணர உதவியாக இருக்கும் என்பது எனது கருத்து.

நண்பர் Rohitha Dasanayaka வின் பணியை, மனந்திறந்து பாராட்டுவதுடன், அவரது இவ்வாறான முயற்சிகள் எதிர்காலத்திலும் வெற்றி அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகின்றேன்.

BY :

MUFIZAL ABOOBUCKER,

SENIOR LECTURER,

UNIVERSITY OF PERADENIYA.

 

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள். இதே போன்ற விடயங்களையும் நிகழ்வுமேடையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top