Muslim History

அயலவர்களை நெகிழவைத்த Chicago Sabeel Ahmed!

Sabeel Ahmed
அயலவர்களை நெகிழவைத்த Chicago Sabeel Ahmed

அமெரிக்காவின் மேற்குத் திசையில் உள்ள மத்திய பகுதிகளில், பல தசாப்தங்களில் இல்லாத அளவு நிலவும் கடுங்குளிர் நிலவி வருகின்றது. Chicago விலும் பனிக் காலநிலையின் தீவிரம் இயல்பு வாழ்க்கையை முற்றாக தடம்புரட்டிப் போட்டிருக்கின்றது.

அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியான 90 மில்லியன் பேர் இதுவரை மைனஸ் 17 டிகிரி செல்சியஸ் குளிரை அனுபவித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக 250 மில்லியன் அமெரிக்க மக்கள், “துருவ சுழற்சியால்” ஏற்பட்டுள்ள இந்த கடுங்குளிரை அனுபவித்து வருகின்றனர். சில பகுதிகளில் மைனஸ் 46 டிகிரி செல்சியஸ்ஸையும் கடந்துவிட்ட நிலையில் குளிரின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவ்வாறு உறையவைக்கும் பனியில் Chicago முஸ்லிம் குடும்பம் ஒன்றின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றது. தனது அண்டை அயலவர்களுக்கு இப் பனியுடன் கூடிய காலநிலையில் கையெழுத்துத் துண்டுப்பிரசுரம் மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

“வெப்பநிலை பூச்சியத்தையும் தாண்டி வீழ்ச்சியடைந்துள்ளது. அயலவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வோம்.” என்று Sabeel Ahmed உம் அவரது மனைவியான Asma Naheed ஆகிய இருவரும் சேர்ந்தே இவ்வாறு கையெழுத்துத் துண்டுப்பிரசுரம் தாயாரித்துள்ளனர். கையால் எழுதப்பட்ட கடிதங்களின் ஐந்து பிரதிகள் அவர்களின் அண்டை வீட்டிலுள்ள 40 வீடுகளுக்கு வழங்கப்பட்டன. அன்றாட பாவனைக்கு தேவைப்படும் பலசரக்குகள், மருந்துகள், பனிக்கட்டிகளை வழிகளில் இருந்து நீக்குதல் போன்ற உதவிகள் வழங்கப்படும் என அந்த பிரதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக Sabeel Ahmed இவ்வாறு குறிப்பிட்டார் “இது அயலவர்களுக்கிடையிலான உறவை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகும். ஒருவருக்கொருவர் இணைந்து சமூக உணர்வுடன் செயற்படவேண்டியவேளை இதுவாகும்.” என்று குறிப்பிட்டார்.

“அயலவர்களுக்கு உதவுதல் என்பது நம்பிக்கையின் ஒரு பெரும் பகுதியாகும். இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் அயலவர்களிடத்தில் அச்ச உணர்வு இருக்கக் கூடும். அவர்கள் முஸ்லிம்களா? அல்லது வேறு நம்பிக்கையைச் சார்ந்தவர்களா? என்று நோக்கத் தேவையில்லை… நாங்கள் மனிதர்கள் என்பதற்கு பல பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. மனிதர்களாகவும், அமெரிக்கர்களாகவும், நம்பிக்கையுள்ள மக்களாகவும் நாம் பல பொதுவான விடயங்களைக் கொண்டுள்ளோம்.” என்று Sabeel Ahmed மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு Sabeel Ahmed மற்றும் அவரது மனைவியான Asma Naheed ஆகியோரின் இச் செயற்பாட்டை அவர்களது அனைத்து அயலவர்களும் மெச்சிப் போற்றினர். இது அனைவருக்குமான முன்னுதாரணமாகும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள். இதே போன்ற விடயங்களையும் நிகழ்வுமேடையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top