Muslim History

எகிப்திற்கு எதிராக வெளியான சிவப்பறிக்கை.

எகிப்து
எகிப்திற்கு எதிராக வெளியான சிவப்பறிக்கை.

எகிப்திற்கு எதிராக வெளியான சிவப்பறிக்கை, பல்வேறு நகர்வுகளுக்கு ஒரு ஆரம்பப் படியாக இருக்கலாம்.

எகிப்தில் இடம்பெற்றுவரும் உரிமை மீறல்களுக்கு, அமெரிக்கா கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கக் கூடாது என்று Washington ஐ தளமாகக் கொண்டியங்கும் இரு அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்க காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளில் இவ் அமைப்புக்களின் பல அறிக்கைகள் கடந்தகாலங்களில் பேசுபொருளாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசாங்கம் எகிப்துக்கு வழங்கி வரும் இராணுவ உதவியை 300 மில்லியன் டொலர்கள் வரை குறைக்க வேண்டும். என்று அக் குழுக்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கு ஜனநாயகம் தொடர்பான திட்டம் (POMED) மற்றும்,

சர்வதேச கொள்கை மையம் (CIP)

ஆகியன வெளியிட்டுள்ள அறிக்கையில், “எகிப்திய அரசாங்கத்திற்கு இந்த உதவி ஒரு உரிமையல்ல என்பதைக் காண்பிப்பதற்கு இவ்வாறான நிதி வெட்டுக்கள் அவசியம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி Abdel Fattah el Sisi இன் எதேச்சதிகார ஆட்சியின் கீழ் மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா கண்மூடித்தனமாகத் ஆதரவளிப்பதாக இவ் அறிக்கை சாடியுள்ளது.

அமெரிக்கா எதேச்சதிகாரத்தை ஊக்குவிக்கின்றது என்றும் POMED மற்றும் CIP இன் இணை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

எகிப்திய அரசாங்கம் அமெரிக்காவின் உதவிகளைப் பெற விரும்பினால்,

  • எகிப்திய சிறைச்சாலைகளில் நடைபெற்றுவரும் சித்திரவதைகள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.
  • ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.
  • Sinai இல் பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தில் பொதுமக்கள் கொல்லப்படுதல், சித்திரவதை செய்யப்படுதல் மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றுக்கு ஒரு முடிவு.

போன்ற முன் நிபந்தனைகள் எகிப்திய அரசாங்கத்திற்கு விதிக்கப்படல் வேண்டும் என்று அவ் அறிக்கை முன் மொழிவுகளை சிபாரிசு செய்துள்ளது.

1978 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அனுசரனையுடன், எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் Camp David சமாதான ஒப்பந்தம் இடம்பெற்றது. இவ் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எகிப்திற்கு ஆண்டுதோறும் 1.3 Bபில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இராணுவ உதவி வழங்கப்பட்டு வந்துள்ளது. 1948 முதல் அமெரிக்கா எகிப்துக்கு மட்டும் 83 Bபில்லியன் டொலருக்கு அதிகமான வெளிநாட்டு உதவிகளை வழங்கியுள்ளது.

2013 முதல் ஆட்சியில் இருந்த Sisi, எகிப்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஜனாதிபதி Mohamed Morsi ஐ ஒரு இராணுவ இரத்தக்களரி சதித் திட்டத்தின் மூலம் தூக்கி எறிந்து சிறையில் அடைத்தார்.

இச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, 2015 ஆம் ஆண்டில் எகிப்துக்கான உதவியை அமெரிக்கா, ஆரம்பத்தில் நிறுத்தி வைத்தது.

எகிப்தின் மோசமான மனித உரிமைப் பதிவுகளை பொறுப்புக்கூற வைப்பதில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அமெரிக்க நிர்வாகங்கள் போதுமான அளவு தீவிரம் காட்டவில்லை என்று இவ் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

Sisi இன் ஆட்சி, மனித உரிமைகளை மீறுவதைத் தொடர்ந்தால், “அமெரிக்க உதவியை முற்றிலுமாக வெட்டுவதற்கு ஏதேனும் சிவப்பு கோடுகள் உள்ளதா” என்பது பற்றிய விவாதத்தின் அவசியத்தை இவ் அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

முறையற்ற விதத்தில் ஆட்சியைப் பிடித்தது சம்பந்தமாக அல்லது எகிப்திற்கு எதிராக யாராவது பேசினால் அல்லது எழுதினால், அவர்களை ஒழித்துக்கட்டுவதற்கு Sisi ஆட்சியைப் பிடித்ததிலிருந்து முழுச் சக்தியையும் பிரயோகித்து வந்துள்ளார்.

இது “நவீன வரலாற்றில் மிகவும் அடக்குமுறையான அரசாக எகிப்தை கட்டியுள்ளது.”

அமெரிக்க அதிபர் Donald Trump இன் நிர்வாகம், “விடயங்களை மோசமாக்கியுள்ளது” என்று இவ்வறிக்கை சாடியுள்ளது.

மேலும் “முந்தைய நிர்வாகங்களுக்கு அப்பாற்பட்ட அளவிற்கு Sisi இன் மோசமான மனித உரிமை மீறல் பதிவுகளைப் புறக்கணித்து எகிப்தின் சர்வாதிகார ஆட்சியை முழுமையாக ஏற்றுக்கொண்டது.” என்று POMED, CIP இன் இணை அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து எகிப்துக்கு தொடர்ச்சியாகக் கிடைத்துவரும் உதவியானது, எகிப்திய அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபனத்தின் உயர் மட்டத்தினரிடையே இது எமது “உரிமை” என்ற கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.

“2011 அரபு வசந்தத்தைத் அடுத்து உண்டான அமைதியின்மை மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் மீதான மிருகத்தனமான ஒடுக்குமுறையுடன் இன்னும் எகிப்து சிக்கிக் கொண்டிருக்கிறது.” என்று இவ்வறிக்கை வௌியாகியுள்ளது.

வெளிப்படையான முறையான இவ் அறிக்கை எகிப்தில் எச்சரிக்கை மணிகளை ஒலிக்க விடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top