School Events

கத்தாரில் மாவனல்லை பதூரியாவின் புட்சால் சுற்றுத்தொடர் 2019

KJC QATAR
கத்தாரில் மாவனல்லை பதூரியாவின் புட்சால் சுற்றுத்தொடர் 2019

கத்தார் வாழ் மாவனல்லை கிரிங்கதெனிய பிரதேச அமைப்பான KJC QATAR கடந்த மூன்று (3) வருட காலமாக தமது அங்கத்தவர்களின் நலன் கருதியும் கிருங்கதெனிய ஐமாத்தின் வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் பல்வேறு வேலைத்திட்டங்களை ஒழுங்கமைத்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கத்தார் வாழ் மாவனல்லை பதூரியா கல்லூரி பழைய மாணவர்களை ஒன்றிணைத்து உறவுகளை பலப்படுத்தும் முயற்சியாக KJC QATAR அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர் குழுக்களுக்கு இடையிலான புட்ஸால் கால் பந்து சுற்றுப்போட்டி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கத்தார் பெர்லிங் சர்வதேச பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது .

9 குழுக்களை பிரதிநிதித்துவபடுத்தி 9 அணிகள் மோதிய இப்போட்டித்தொடரில் பல விறுவிறுப்பான போட்டிகளின் பின்னர் குழு 79, குழு 77,குழு 71,குழு 82 ஆகிய அணிகள் அரை இறுதி சுற்றிட்கு தகுதி பெற்றன .

முதலாவது அரையிறுதி போட்டியில் குழு 71 அணியை எதிர் கொண்ட குழு 79 அணியினர் பலத்த போட்டியின் பின்னர் 1 : 4 என்ற கோள்கள் அடிப்படையில் வெற்றியை தனதாக்கி சுற்றுத்தொடரின் மிகவும் பலம் வாய்ந்த அணியாக இறுதி போட்டிக்கு வழி அமைத்துக்கொண்டது.

இரண்டாவது அரை இறுதி போட்டிக்காக குழு 77 அணி மற்றும் குழு 82 அணிகள் மோதிய போட்டி 1:1 என்ற கோள்கள் அடிப்படையில் சமநிலையில் நிறைவடைய பெர்னால்ட்டி அடிப்படையில் 2:3 என்ற கோல் வித்தியாசத்தில் குழு 82 அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதி போட்டியில் குழு 82 அணியினரை எதிர் கொண்ட குழு 79 அணியினர் போட்டியின் ஆரம்பம் முதலே சிறந்த ஒரு விளையாட்டை வெளிப்படுத்தி போட்டியின் ஆதிக்கத்தை தன் வசப்படுத்திக்கொண்டனர், போட்டியின் 11 வது நிமிடத்தில் குழு 79 அணியின் தலைவன் நப்லான் இறுதிப்போட்டியின் முதலாவது கோலை தனது அணிக்கு பெற்றுக்கொடுத்து தமது அணிக்கு மேலும் பலம் சேர்த்தார், இறுதி போட்டியில் 1:0 என்ற கோல் வித்தியாசத்தில் குழு 82 அணியினரை வெற்றிகொண்ட குழு 79 அணியினர் கத்தார் மண்ணில் நடைபெற்ற முதலாவது “பதுரியன்ஸ் புட்ஸால் பியஸ்டா” தொடரின் செம்பியன் அணியாக மகுடம் சூடிக்கொண்டனர் .

போட்டி தொடரின் சிறந்த வீரனாக தொடரின் அதி கூடிய கோல்களை (6) பெற்று கொண்ட குழு 79 அணியின் முன்கள வீரன் ஸகீப் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை சிறந்த கோல் காப்பாளராக குழு 82 அணியின் கோல் காப்பாளர் சாகிர் உம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

மாவனல்லை உதைபந்தாட்ட வரலாற்றில் தலைசிறந்த வீரர்களை உருவாக்கிய பதுரியா மத்திய கல்லூரியின் வெளி நாடுகளில் வசிக்கும் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து இவ்வாறன ஓர் நிகழ்வினை ஏட்பாடு செய்தமை இதுவே முதல் முறை எனபதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 3000 மாணவர்களைக் கொண்ட பதுரியா மத்திய கல்லூரி, சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள தமிழ் மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் தரவரிசையில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல பெருமைகளைக் கொண்ட இப்பாடசாலையின் கத்தார் வாழ் பழைய மாணவர்களால் முதல் முறையாக நடத்திய இந்நிகழ்வு கல்லூரியின் வரலாற்றில் முக்கிய மைல்கல் என்றால் மிகையாகாது.

ஷம்ரான் நவாஸ் – துபாய்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top