Muslim History

கனடாவில் முதன் முதலாக பகிரங்கமாக அதான் ஒலித்தது …

கனடாவில் முதன் முதலாக
கனடாவில் முதன் முதலாக பகிரங்கமாக அதான் ஒலித்தது ...

புனித ரமலழான் மாதத்தில் கனடாவில் முதன் முதலாக பகிரங்கமாக அதான் ஒலித்தது… இவ்வாறு சில மஸ்ஜித்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. புனித ரமழான் மாத ஆரம்பத்தில் இதற்கான கோரிக்கையை முஸ்லிம்கள் முன்வைத்திருந்தனர்.

இக் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இவ் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவில் பகிரங்கமாக அதான் ஒலித்தது …

Toronto, Edmonton, Ottawa மற்றும் Hamilton ஆகிய மாநகராட்சிகள் இந்த அனுமதியினை, ரமழானைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளன.

கனடாவில் முதன் முதலாக பகிரங்கமாக அதான் ஒலித்தது… தொடர்பில் கனேடிய முஸ்லிம்கள் அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Hamilton இல் உள்ள Mountain Mosque இன் இமாம் Seyid Tora அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (01.05.2020) தனது கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“இது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு வரலாற்று தருணம்”

“தொழுகைக்கான அழைப்பு அல்லாஹ்வை வணங்குவதற்குரிய அழைப்பாகும், இந்த அழைப்பை அனைவரும் கேட்பது முக்கியம்.”

என்று இமாம் Seyid Tora குறிப்பிட்டிருந்தார்.

ரமழான் மாதத்திற்கு மாத்திரமே இவ்வாறு பகிரங்கமாக அதான் ஒலிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. புனித ரமழான் முடிவுற்ற பின்னரும் இவ் அனுமதியை நீடித்துப் பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதே போன்று கனடாவில் உள்ள வேறு நகரங்களில் உள்ள மஸ்ஜித்களும், அதான் ஒலிப்பதற்குரிய அனுமதியைக் கோரி உள்ளூராட்சி சபைகளை நாடியுள்ளன என்பதையும் அறிய முடிகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top