Muslim History

கொரோனா ஒரு புறம் – மனிதாபிமானம் இன்னொரு புறம்.

கொரோனா
கொரோனா ஒரு புறம் - மனிதாபிமானம் இன்னொரு புறம்.

பிரதிபலனை எதிர்பாராமல் தேவையுடையோருக்கு உதவுவது விசுவாசத்தின் வெளிப்பாடாகும்.

100 க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் Face Masks மற்றும் Antibacterial Hand Gel என்பன விலை அதிகரித்து காணப்படுவதுடன் அவற்றுக்கான கேள்வியும் சடுதியாக அதிகரித்துக் காணப்படுகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் Scotland இல் சொந்தமாக கடையொன்றை வைத்திருக்கும் Jawad என்பவர் தமது குடும்பத்தின் மறுமைக்கான முதலீடு பற்றி சிந்தித்திருக்கின்றார்.

அப் பகுதியில் வசிக்கும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு Facemasks, Antibacterial Hand Gel மற்றும் Cleaning Wipes அடங்கிய பொதிகளை இலவசமாக அன்பளிப்புச் செய்துவருகின்றார். இவ்வாறான 500 பொதிகளை Jawad உம் அவரது மனைவியான Asiyah Javed உம் அன்பளிப்புச் செய்துவருகின்றனர்.

“நான் வயதான பெண்மணி ஒருவரைச் சந்தித்தேன். அப் பெண்மணி அழுதுகொண்டு கை கழுவுவதற்கான Antibacterial Hand Gel வாங்குவதற்கு எங்கும் கிடைக்கவில்லை என்ற விடயத்தைக் கூறினார்.”

“வயதானவர்களுக்கு இவ்வாறு அவதியுறுவது நியாயமில்லை என்று நான் நினைக்கிறேன், சிலர் வீட்டை விட்டு வெளியேற முடியாத முதுமை நிலையில் காணப்படுகின்றனர்.”

“30 பேரைக் கொண்ட முதியோர் காப்பு இல்லத்திற்கு 30 பொதிகளைக் கொடுத்தோம். அதேபோன்று நடக்கவும், வாகனம் ஓட்டவும் முடியாத, வீட்டை விட்டு வெளியில் வர முடியாதவர்களுக்கும் அன்பளிப்புச் செய்தோம்.”

என்று இத் தம்பதியினர் குறிப்பிட்டனர். இத் தம்பதியினர் பிறருக்கு உதவுவது இது முதற்தடவையில்லை என்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு உதவி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத் தம்பதியினருக்காகவும், நோய் பாதுகாப்புக்காகவும், உதவும் மனநிலை வேண்டியும்,
இறைவனிடம் பிராத்தனை புரியுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top