Muslim History

சவூதியில் அமுலுக்கு வரவிருக்கும் பிறநாட்டவர்களுக்கான புதிய கட்டுப்பாடு

சவூதி
சவூதியில் அமுலுக்கு வரவிருக்கும் பிறநாட்டவர்களுக்கான புதிய கட்டுப்பாடு

சவூதி அரசு, தன் நாட்டுப் பெண்களை திருமணம் முடிக்க விரும்பும் பிறநாட்டவர்களுக்கு இறுக்கமான நடைமுறையினைப் பின்பற்ற ஆலோசித்து வருகின்றது.

தங்கள் நாட்டுப் பெண்களைத் திருமணம் முடிக்கும் பிறநாட்டு ஆண்களை போதைப் பாவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டத்தினைக் கொண்டுவர உள்ளது.

பிறநாட்டவருடனான திருமணத்திற்குப் பிறகு போதைவஸ்த்துப் பாவனையால் சமூகப் பிரச்சினைகள் தோன்றி விடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இத் திட்டத்தை சவூதி அரசு கொண்டுவருவதாக அறிவிப்புச் செய்துள்ளது.

இந்த புதிய நடைமுறை தொடர்பாக சுகாதார அமைச்சு சகல வைத்தியசாலைகளுக்கும் கிளினிக்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இந்தப் புதிய நடைமுறையினால் விவாகரத்துப் பிரச்சினைகளும் கனிசமான அளவுக்கு குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் நீதிமன்றங்களில் காணப்படும் சொத்துக்கள் தொடர்பான உரிமைப் பிரச்சினைகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நீதி அமைச்சின் புள்ளிவிபரத்தின்படி கடந்த வருடம் சவூதியைச் சேர்ந்த 3,596 ஆண் பிரஜைகள்  பிறநாட்டுப் பெண்களை திருமணம் செய்துள்ளனர். இதேபோன்று 3,352 சவூதி பெண்கள் பிற நாட்டு ஆண்களைத் திருமணம் புரிந்துள்ளனர்.

2015 ல் சவூதியில் 133,000 திருமணங்களும், 40,000 விவாகரத்துக்களும் நடைபெற்றுள்ளன.

சவூதியில் 10.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இது அந்நாட்டுடன் ஒப்பிட்டும் போது 1/3 பங்காகும்.

ஆசியா, தெற்காசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல தரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சவூதியில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 Qiran.com Muslim Matrimonials – Register for FREE

To Top