Events

சீனாவின் Uyghur முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்கும் அமெரிக்க இமாம்கள்.

Uyghur
சீனாவின் Uyghur முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்கும் அமெரிக்க இமாம்கள்.

130 இற்கு அதிகமான அமெரிக்க இமாம்கள் இணைந்து சீனாவின் Uyghur பிராந்தியத்தில் உள்ள 30 இலட்சம் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் துன்புறுத்தல்களை நிறுத்தக் கோரும் அறிக்கையில் கையெழுத்திட்டு அதனை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இவ் அறிக்கையில் அமெரிக்க இமாம்கள் முன்வைத்துள்ள பிரதான கோரிக்கை யாதெனில், சீனாவின் அண்டை நாடுகள் Kazakhs, Kyrgyz, கிழக்கு துர்கிஷ்த்தானில் உள்ள Uzbeks போன்ற சிறுபான்மையினருக்கு சுதந்திரம் வழங்கியது போன்று, சீனப் பிராந்தியத்தில் உள்ள Uyghurs முஸ்லிம்களுக்கும் சுதந்திரம் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளது.

“நாங்கள் சீனக் குடியரசைக் கேட்டுக் கொள்வதெல்லாம், Uyghurs முஸ்லிம்களை மிகவும் நெருக்கமான முகாம்களில் இருந்து விடுவிக்கக் கோருகின்றோம். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அவர்களது குடும்பத்தவர்களிடம் அனுப்பி வையுங்கள். மேலும் அவர்களுடைய சமயச் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் மதச் சுதந்திரத்தை மீளவும் அவர்களிடம் கையளியுங்கள். எமது இக் கோரிக்கையை ஆதரிக்குமாறு ஏனைய நாடுகளையும் கேட்டுக் கொள்கின்றோம். அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வதை முகாம்களில் இருந்து Uyghurs முஸ்லிம்களைக் கொண்டு அடிமை உழைப்பு மூலம் உருவாக்கப்பட்ட தயாரிப்புக்களை பகிஷ்கரிக்குமாரு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.”

“இப் பிரச்சினையை மனித உரிமை மீறலாக பிரகடனம் செய்ததுடன், வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Uyghurs களுக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்த அமெரிக்க அரசாங்கத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என அமெரிக்க இமாம் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

அது மாத்திரமன்றி எதிர்வரும் 2019 April 6 ஆம் திகதி Uyghur மக்கள் தொடர்பாக கவனயீர்ப்பு நிகழ்வொன்றை Washington DC இல் நடாத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள். இதே போன்ற விடயங்களையும் நிகழ்வுமேடையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top