Muslim History

தன்னைத் தாக்கியவரை மன்னித்த பள்ளிவாசல் முஅத்தின்!

Raafat Maglad
தன்னைத் தாக்கியவரை மன்னித்த பள்ளிவாசல் முஅத்தின்!

London பள்ளிவாசலின் முஅத்தின் தன்னை கழுத்தில் குத்திய நபருக்கு மன்னிப்பளித்துள்ளார். இத் தாக்குதல் சம்பவம் பள்ளிவாசலுக்குள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மன்னிப்பளித்தது தமது ஈமானின் (நம்பிக்கையின்) ஒரு பகுதி என அவர் விபரித்துள்ளார்.

“நான் அவரை மன்னித்து விட்டேன். நான் அவருக்காக மனம் வருந்துகிறேன்.” என்று Regent’s Park இல் உள்ள London Central Mosque இன் முஅத்தின் Raafat Maglad தெரிவித்துள்ளார்.

லன்டனில் வசிக்கும் Raafat Maglad சூடான் நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவராவார். தொழுகையின் போது, 29 வயது நபரால் கத்திக் குத்துத் தாக்குதலுக்கு இலக்கானார்.

“நாங்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரம், பின்னால் இருந்து ஒருவர் என்னை கழுத்தில் கத்தியால் குத்தினார். அவர் எதனையும் குறிப்பிடவுமில்லை. எனது கழுத்தில் இருந்து இரத்தம் வழிந்தோடியது. நான் விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டேன். அனைத்தும் எதிர்பாராத விதமாக நடந்தது..” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அல்குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்ட தார்மீக பண்புகளில் ஒன்று மன்னிப்பாகும்.
“மென்மையையும், மன்னிக்கும் நடத்தையையும் மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும், அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!”
அல்குஆன் 7:199

இவ்வாறு நடந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் மன்னிப்பளிக்கப்பட்டமை வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top