Muslim History

துருக்கியின் இன்றைய நிலை

ஹிஜ்ரி 857 ம் காலப்பகுதியில், உஸ்மானிய ஆட்சியாளர்களால் துருக்கியில் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. அன்று முதல் துருக்கி இஸ்லாமியர்களின் தலைமையில் இருந்து வந்தது.18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் இடம்பெற்ற தொழில் புறட்சியின் விளைவாக, துருக்கி இஸ்லாமிய விழுமியங்களை இழந்து, 1924 ல் இஸ்லாமிய கிலாபத் ஆட்சி நிறைவுக்கு வந்தது.

அதன் பின் சடவாத மதசார்பற்ற சிந்தனையுடைய முஸ்தபா கமால் அத்தாதுர்க் ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்கள் மிக கடுமையான அடக்கு முறைக்கு உள்ளானார்கள். பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மூடப்பட்டு இஸ்லாமிய அடையாளங்களோடு வாழ்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை வாழ்வியலாக கொண்டு வருவதற்கு பல இயக்கங்கள் முனைந்தன. அதில் ‘நக்ஸ்பந்தியா’ இயக்கத்தைச் சேர்ந்த ‘ஸஈத் பீரான்’ அவர்கள் மதசார்பற்ற சிந்தனையை எதிர்த்து ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தார். இதன் விளைவாக இவரின் அமைப்பு நசுக்கப்பட்டு இறுதியில் ஸஈத் பீரான் கொலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, இவர்களின் சிந்தனையை பின்பற்றி ‘பதிஉஸ்மான் ஸஈத் நூர்ஸி’ அவர்கள் இஸ்லாமிய பண்பாட்டுப் பயிற்சி மூலம் தனது போராட்டத்தை ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக இவர் நாடுகடத்தப்பட்டார், எனினும் அவர்களின் கட்டுரைகள், நூல்கள், உரைகள் துருக்கிய மக்களின் உள்ளத்திலும், பகுத்தறிவிலும் இன்று வரை தாக்கம் செலுத்துகின்றன.

1950 ல் அத்னான் மந்த்ரீஸ் என்பவர் துருக்கியின் பிரதமராக பதவி ஏற்றார். இவரது காலத்தில் இஸ்லாமிய செயற்பாடுகள் மக்களிடத்தில் அதிகரித்தது. இதனை சகித்து கொள்ளாத இராணுவம், புரட்சி ஒன்றை ஏற்படுத்தி 1960 ல் ஆட்சியை மந்த்ரீஸ் அவர்களிடமிருந்து கைபற்றியது. இதன் போது மந்த்ரீஸ் தூக்கிலிடப்பட்டார். இதே ஆண்டில் பதிஉஸ்மான் ஸஈத் நூர்ஸி அவர்களும் வபாத்தனர்கள்.

1970 ல் இஸ்லாமிய சிந்தனையாளரும், பொறியளாளருமான ‘நஜ்முதீன் அர்பகான்’ அவர்கள் பல்வேறு இயக்கங்களையும், சிந்தனையளர்களையும் இணைத்துக் கொண்டு களத்தில் இறங்கி, 1973 ல் துணை பிரதமராக பதவியேற்றார்.

மீண்டும் 1980 பிற்பகுதியில் இராணுவ புரட்சி ஏற்பட்டு, அர்பகான் கைதுசெய்யப்பட்டு, விடுதலையானார். ஆனாலும் இவரது போராட்டம் தொடர்ந்தது. இதன் விளைவாக 1996 ல் ஆட்சியை கைப்பற்றி மீண்டும் அர்பகான் துருக்கியின் பிரதமரானார். மீண்டும் துருக்கியில் இஸ்லாத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மேற்குலகம் மீண்டும் இராணுவத்தை தூண்டி அர்பகானின் ஆட்சியை கவிழ்த்தது.

அதே கால கட்டத்தில், அர்பகான் அவர்களின் மாணவரும், அவருடன் இணைந்து செயற்பட்ட முன்னால் இஸ்தான்புல் நகர மேயருமாகிய, தற்போதைய ஜனாதிபதி ரஜம் தயுப் அர்துகான் அவர்கள் அப்துல்லாஹ் குல்லுடன் இணைந்து 2001 ல் நீதிக்கும் அபிவிருத்திக்குமான் கட்சியை ஆரம்பித்தார்.

Turkey

2002 ல் இடம்பெற்ற தேர்தலில் அமோக வெற்றியை பெற்று மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றார். அரசியலில் ஈடுபட தடை இருந்ததால் அமைச்சரவைக்கு தனது அப்துல்லாஹ் குல் தலைமை ஏற்றார். தனது தடை நீக்கப்பட்டு அதே ஆண்டு அர்துகான் பிரதமராக பதவியேற்றார். இவர் தொடர்ச்சியாக முன்று முறைகள் பிரதமராக பதவிவகித்து தற்போது ஜனாதிபதியாகவும் பணியாற்றுகின்றார்.

துருக்கியில் இப்போது, இராணுவத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டு, இஸ்லாத்திற்கு எதிரான சட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய விழுமியங்கள் எழுச்சி பெற்று வருகின்றன. இது அர்துகானின் அரசியல் சாணக்கியமே.

அர்துகான் ஜனாதிபதியக வெற்றி பெற்றவுடன், “பலஸ்தீன் மற்றும் சிரியாவில் அநீதி இழைக்கப்பட்டவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் எனக்காக துஆ செய்ததற்கு நன்றி, அல்லாஹ்வின் உதவியால் இன்று முதல் காசாவில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக துருக்கி மருத்துவமனைக்கு அழைத்துவரபடுவார்கள்” என அறிவித்தார். இன்று வரை பலஸ்தீனுக்கு ஆதரவாக செயற்படுகின்றார்.

இன்று, துருக்கி உலக பொருளாதரத்தில் 17ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஐரோப்பாவில் பொருளாதர ரீதியாக ஜேர்மனி அடைந்துள்ள வளர்ச்சியை விட 3 மடங்கு அதிகம் துருக்கி அடைந்துள்ளது.
இதையெல்லாம் விட, தடை செய்யப்பட்டிருந்த இஸ்லாம், இன்று வாழ்வியலாக மாறுவதற்கு சுதந்திரம் இருக்கின்றது. அல்குர்’ஆனும், ஹதீஸும் அரச பாடதிட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 90% மாணவர்கள் அதை தாமகவே தேர்வு செய்கின்றனர். எட்டு ஆண்டுகளில் புதிய பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் நிறுவப்படவுள்ளன. இதனூடக 2023 ல் 300,000 அறிவியல் விஞ்ஞானிகளை உறுவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கை அடைந்து கல்வியிலும், பொருளாதரத்திலும் துருக்கி மேலும் வளர்ச்சி பெற அல்லாஹ்

என்றும் துணைபுரிவானக. ஆமின்!

Turkey

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top