Muslim History

முதலில் இன அழிப்பு; தற்போது நில அழிப்பு : Rohingya முஸ்லிம்கள்

Rohingya
முதலில் இன அழிப்பு; தற்போது நில அழிப்பு : Rohingya முஸ்லிம்கள்

முதலில் Rohingya முஸ்லிம் கிராமங்கள் தீ மூட்டி எரிக்கப்பட்டன, அங்குள்ள முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றனர். இது Rohingya முஸ்லிம்களுக்கு எதிராக Myanmar அரசு கட்டவிழ்த்த இன அழிப்பு நடவடிக்கையாகும். தற்போது Myanmar அரசு Rohingya சிறுபான்மை முஸ்லிம்களின் வாழிடங்களை Bulldozer போன்ற கனரக வாகனங்களைப் பயன்படுத்தி நிலஅழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

இது தொடர்பான ஆதாரபூர்வமான படங்கள் Satellite தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்டுள்ளன. Rohingya பிரதேசத்தில் உள்ள சிறுபான்மை முஸ்லிம்களின் சிறு சிறு கிராமங்கள் பலவும் Bulldozer கொண்டு அடையாளம் தெரியாதவாறு முற்றாக மண்ணோடு மண்ணாக மட்டமாக்கப்பட்டுள்ளன. கடந்த 2017 August ல் முஸ்லிம்கள் வாழும் Rohingya பிரதேசத்தில் தீ வைப்புச் சம்பவங்களுடன் ஆரம்பித்த இன அழிப்பு நடவடிக்கை Myanmar படைத்தரப்பினரால் மிருகத்தனமான முறையில் கொடூரமாக முன்னெடுக்கப்பட்டது. இதனால் Rohingya முஸ்லிம்கள் Bangladeshக்குத் தப்பிச் சென்றனர்.

Bangladesh ல் உள்ள Rohingya முஸ்லிம்களை மீள Rohingya வுக்கு அனுப்புவதற்கு Bangladesh ஆலோசித்து வரும் நிலையிலேயே “நில அழிப்பு” நடவடிக்கையை Myanmar ஆரம்பித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top