Events

நெருப்பினுள் புகுந்த முஸ்லிம் இளைஞர் – குழந்தைகளை உயிருடன் மீட்டாரா ?!

Adam Attalla
நெருப்பினுள் புகுந்த முஸ்லிம் இளைஞர் - குழந்தைகளை உயிருடன் மீட்டாரா ?!

அடுத்த வீடு தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் – தீயின் வேகத்தையும் கரும்புகையின் எழுச்சியையும் கூட்டிக் கொண்டிருந்தது. கூடி நின்றுகொண்டிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் அந்த வீட்டினுள் அகப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்தானது.

Mississauga நகரம், Canada வின் Toronto நகரை அடுத்துள்ள ஒரு நகரமாகும்.

இந் நகரத்தில் Adam Attalla எனும் 18 வயது முஸ்லிம் இளைஞன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். சடுதியாக தனது பக்கத்து வீடுகளில் ஒன்று தீப்பிடித்து எரிவதை Adam Attalla கண்ணுற்றார். “புகை அதிகமாக வந்துகொண்டிருந்தது. இரண்டு சிறுமிகள் வீட்டைவிட்டு கீழே வந்தனர். ஏனைய சிறுமிகள் வீட்டினுள் சிக்கிக் கொண்டனர். இவ்விடயத்தை கூடிநின்றவர்களிடம் எடுத்துக் கூறினேன். அவர்களும் எதுவும் செய்வதாக இல்லை. எனவே, நான் முதலில் சுவரில் ஏற முயற்சித்தேன். அதுவும் கைகூடவில்லை.

இந்நேரத்தில் பக்கத்து வீட்டுக்கார பெண்மணி என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நான் அவர்களுடைய கூரையிலிருந்து தீப்பிடித்த வீட்டுக் கூரைக்கு குதித்து ஜன்னலைத் திறந்து தீப்பிடித்த வீட்டினுள் அகப்பட்டிருந்த சிறுமியர்களை வெளியே மீட்டெடுத்தேன், ” என்று Adam Attalla தனது வீரதீர செயல்களைப்பற்றிக் கூறினார்.

அல்லாஹ் அல்-குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான் :

“… எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்…”  அல்-குர்ஆன் – 5 : 32

District Fire Chief Craig Dockery குறிப்பிடும்போது “Adam Attalla பக்கத்து வீட்டுக்குள் சென்று.. அவ்வீட்டிலிருந்து எரியுண்ட வீட்டின் கூரை மீது குதித்து, கூரை வழியாக நடந்து சென்று இரண்டாவது மாடியில் இருந்த ஜன்னலை திறந்து ஏழு வயது சிறுமியை வெளியே வர உதவினார். பின்னர் மூன்று குழந்தைகளும் கூரை வழியாக நடந்து பக்கத்து வீட்டிற்குச் சென்றனர். இது எமது கண்களையே நம்பமுடியாமலிருந்தது.” என்று District Fire Chief Craig Dockery குறிப்பிட்டார்.

“நான் வீரதீரச் செயல்கள் எதனையும் செய்துவிடவில்லை. எனது மனதில் சரியென தோன்றியதையே செய்து முடித்தேன்.” என Adam Attalla மேலும் குறிப்பிட்டார்.

Adam Attalla, Mississaugaவில் உள்ள ஒரு தனியார் இஸ்லாமியப் பாடசாலையான Olive Grove School (OGS) பாடசாலையின் பட்டதாரி ஆவார்.

“18 வயதான Adam Attalla வின் நம்பமுடியாத துணிச்சலானது, பல குழந்தைகளை தீயில் இருந்து காப்பாற்ற கூரையின் மீது ஒரு வழியைக் கண்டுபிடித்தது. உங்கள் வீரம் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது” என்று Mississauga நகரின் Mayor, Bonnie Crombie குறிப்பிட்டார்.

எமது பிறப்பு அயலவர்களுக்கும், தேசத்திற்கும் நன்மையாக அமையட்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top