Muslim History

இம் முறை (2018) ஹஜ்ஜுக்குச் சென்ற, அமெரிக்காவின் ஒலிம்பிக் வெற்றியாளர்.

ஹஜ்ஜுக்குச் சென்ற ஒலிம்பிக் வெற்றியாளர்
இம் முறை (2018) ஹஜ்ஜுக்குச் சென்ற, அமெரிக்காவின் ஒலிம்பிக் வெற்றியாளர்.

அமெரிக்க முஸ்லிமான Ibtihajj Muhammad இவ் வருடம் ஹஜ் கடமையினை நிறைவேற்றியுள்ளார்.

ஹஜ்ஜுக்குச் சென்ற ஒலிம்பிக் வெற்றியாளர்

2016 ல் நடைபெற்ற Olympic நிகழ்ச்சியில் பங்குபற்றி அமெரிக்காவுக்கு பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தவர் மாத்திரமன்றி ஹிஜாப் அணிந்த நிலையில் Olympic நிகழ்ச்சியில் பங்குகொண்டமையும் குறிப்பிடத்தக்கது. அவரது ஹஜ் பற்றிய அனுபவங்கள் பகிரப்படுகின்றது.

உலகின் பல பாகங்களில் இருந்தும் பல்வேறுபட்டவர்கள், தமது சமயக் கடமையை முனைப்புடன் நிறைவேற்றியமையை தான் தனது மறக்க முடியாத அனுபவமாக கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஹஜ் ஆரம்பமாகி 3வது வாரத்தில் Ibtihajj சவூதி அரேபியாவுக்கு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக வருகை தந்தார். Al Islam travel Agency ஹஜ் செய்வதற்கான அழைப்பை Ibtihajj வுக்கு மேற்கொண்டிருந்தது.

“இது புனித கடமையை மேற்கொள்ள அல்லாஹ்வின் அழைப்பாகவே நான் கருதினேன். அப்போதிலிருந்து நான் அதிர்ச்சி கலந்த உணர்ச்சிவசப்பட்ட பரவச நிலைக்கானேன். மேலும் மேற்கொண்டு எவ்வாறு செயற்படுவது என்ற ஒரு இனம்புரியாத அச்ச உணர்வும் என்னைப் பற்றிக்கொண்டது. இதுவரை கேள்விப்பட்ட அல்லது வாசித்தறிந்த விடயங்களை விட உண்மையில் ஹஜ்ஜுக்காக புறப்பட்டுச் செல்லப் போகின்றோம் என்ற உணர்வு என்னை ஒரு அருள்பாளிக்கப்பட்ட ஒருவராகவும் அதிர்ச்சி நிலைக்கு உட்பட்டவராகவும் உணரச் செய்தது.”

பயணத்திற்கான Visa நடவடிக்கைகள் தங்குதடையின்றி நடந்தேறின. அவரது பயணம் அமெரிக்காவின் Los Angeles, California வில் இருந்து ஆரம்பித்து சவூதியை வந்தடைந்தது.

கஃபதுல்லாஹ்வை முதன்முதலில் காணும்போது தன்னை மறந்த நிலைக்கு தான் சென்றதாக Ibtihajj Muhammad குறிப்பிடுகின்றார்.

மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top