Muslim History

ஹஜ் புள்ளி விபரங்கள் – 2018 (1439H)

ஹஜ் புள்ளி விபரங்கள்
ஹஜ் புள்ளி விபரங்கள் - 2018 (1439H)

2018 ஆம் ஆண்டின் முஸ்லிம்களின் சர்வதேச ஒன்றுகூடல் தற்போது நிறைவுபெற்றுள்ளது.

ஐங்காலத் தொழுகையில் எந்தத் திசையை நோக்கித் தொழுது வருகின்றோமோ, அந்த ‘மஸ்ஜிதுல் ஹரமுக்கே’ சென்று எமது முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி தற்போது நாடுதிரும்பும் நிலையில் உள்ளனர்.

இச் சந்தர்ப்பத்தில் ஹஜ் பயணிகள் தொடர்பான புள்ளிவிபரங்களை, நிகழ்வுமேடை கடந்த வருடம் போல் தற்போதும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.

இவ்வருட புனித ஹஜ் யாத்திரிகை சம்பந்தமான புள்ளி விவரங்களை சவுதியில் இயங்கும் General Authority for Statistics (GaStat) எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 49 வருடங்களாக ஹஜ் சம்பந்தப்பட்ட புள்ளி விவரங்களை திரட்டிவருகின்றது. அதன் அறிக்கையின்படி,

இவ்வருடம் மொத்தமாக 2,371,675 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளனர். இதில் 612,953 பேர் உள்நாட்டு ஹஜ் யாத்திரிகர்கள் ஆவர்.

Source: (GaStat)

இதே போன்று 1,758,722 (ஆண்-931,450 பெண்-827,272)பேர் வெளிநாட்டு யாத்திரிகர்கள் ஆவர்.

 

  • 2015 – 1,952,817 பேரும்
  • 2016 – 1,862,969 பேரும்
  • 2017 – 2,352,122 பேரும்
  • 2018 – 2,371,675 பேரும்

ஆண்டு அடிப்படையில் மொத்தமாக ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

வெளிநாட்டு யாத்திரிகர்களைப் பொறுத்தவரை, எகிப்திலிருந்தே கூடிய யாத்திரிகர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்துள்ளனர்.

  • எகிப்து – 44,314 (40.7%) பேரும்
  • பாகிஸ்தான் – 12,838 (11.8%) பேரும்
  • இந்தியா – 12,319 (11.3%) பேரும்
  • யெமென் – 10,823 (9.9%) பேரும்

இம் முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்துள்ளனர்.

[மேலுள்ள நூற்றுவீதமானது மொத்த வெளிநாட்டவரின் நூற்றுவீதத்தின் அடிப்படையிலானதாகும்.]

 

Source: (GaStat)

 

கடந்த வருடம் மற்றும் இவ்வருடத்திக்கு இடையிலான வெளிநாட்டு ஹஜ் யாத்திரிகர்களின் வித்தியாசம்.

Source: (GaStat)

Source: (GaStat)

வெளிநாட்டு பயணிகளைப் பொறுத்தவரை வான்வழி மார்க்கமாக 1,656,936 பேரும், தரைமார்க்கமாக 85,623 பேரும், கடல் மார்க்கமாக 16,163 பேரும் இம் முறை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Source: (GaStat)

Source: (GaStat)

மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்..

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top