Muslim History

ஹஜ் மற்றும் உம்ரா செய்யவிருக்கும் வயோதிபர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!

உம்றா யாத்திரிகர்கள்
ஹஜ் மற்றும் உம்ரா செய்யவிருக்கும் வயோதிபர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!

ஹஜ் மற்றும் உம்ராவுக்கு எமது வயது முதிர்ந்த பெற்றொரை அழைத்து செல்வதற்கு அவர்களின் உடல் நிலைகருதி நாம் சிந்திப்பதுண்டு. அவற்றுக்கெல்லாம் விடை காண்பதுபோல், வயது முதிர்ந்த ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்களின் நன்மை கருதி Electric வாகனங்கள் அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு டிசம்பர் 12 ஆம் திகதி மக்காவில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் வயது முதிர்ந்த யாத்திரிகர்களின் மார்க்கக் கடமைகள் இலகுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. முதலில் கஃபாவை சுற்றி தபாவ் செய்தலுக்காக இவ் வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இவ்வகையான Electric வாகனங்களில் ஒரே தடவையில் 6 பேர் பயணிக்க முடியும் என்பதோடு 24 மணி நேரமும் இதன் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி தரத்துடனான இவ் Electric வாகனங்கள் சௌகரிகமான இடவசதியைக் கொண்டுள்ளது. மேலும் யாத்திரிகர்களுக்கு வசதிவாய்ப்புகளை செய்து கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக புனித நகரங்களுக்கான அபிவிருத்தி திட்டக் குழுமம் கருத்து வெளியிட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. கருத்துகளை பதிய கீழே கிளிக் செய்யவும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top