Muslim History

ஹஜ் 2016 (1437H) புள்ளி விபரங்கள்.

இவ்வருட புனித ஹஜ் யாத்திரிகை சம்பந்தமான புள்ளி விவரங்களை சவுதியில் இயங்கும் General Authority for Statistics (GaStat) எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 47 வருடங்களாக ஹஜ் சம்பந்தப்பட்ட புள்ளி விவரங்களை திரட்டிவருகின்றது. அதன் அறிக்கைப்படி 2016 ஆம் ஆண்டின் ஹஜ் கடைமையை மேற்கொண்ட வெளிநாட்டு ஆண் யாத்திரீகர்கள் 54.6 சதவீதத்தினராவர், யாத்திரீகர்களின் சதவீதம் 45.4 வீதமாகும்.

இதே போன்று வெளிநாட்டிலிருந்து பயணித்த பயணிகளில் 94 வீதமானோர் விமானம் மூலமும், 5 சதவீதத்தினர் எல்லை தாண்டியும், எஞ்சிய 1 வீதத்தினர் கடல் மார்க்கமாகவும் ஹஜ் கடமையை மேற்கொண்டிருந்தனர்.

Haj Statistics

இவ் வருடம் 1,325,372 வெளிநாட்டு யாத்திரிகர்களும் 537,537 உள் நாட்டுப் பிரஜைகளுமாக மொத்தம் 1,862,909 பேர் ஹஜ் கடைமையினை மேற்கொண்டிருந்தனர். இதில் சவூதியில் வசிக்கும் வெளிநாட்டவர்களில், எகிப்து நாட்டவர்கள் அதிகளவில் இம்முறை ஹஜ் கடமையினை மேற்கொண்டனர். இவர்களையடுத்து பாகிஸ்தானியர்களும், இந்தியர்களும் முறையே இரண்டாம், மூன்றமிடத்திலும் உள்ளனர்.

Haj Statistics

Haj Statistics

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ் வருடம் ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கையில் சற்று சரிவுப் போக்கு காணப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top