Muslim History

2018 இல் பிரகாசித்த முஸ்லிம் பெண்கள்.

முஸ்லிம்
2018 இல் பிரகாசித்த முஸ்லிம் பெண்கள்.

ஆரோக்கியமான சமூகமொன்று உருவாக வேண்டுமென்றால், அச் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆரோக்கிய சிந்தனையுடன் செயற்படுதல் வேண்டும். அத்தகைய ஆரோக்கிய சிந்தனை உள்ளவர்களை ஒவ்வொரு குடும்பத்திலும் செப்பனிட்டு உருவாக்கக்கூடிய திறனும் சக்தியும் பெண்ணிடத்திலும், தாய்மையிடத்திலும் உண்டு என்ற புரிதலுடன் இத்தொகுப்பினைக் கடந்து செல்வோம்….

2018 ஆம் ஆண்டில் உலக அரங்கில் பல்வேறு துறைகளிலும் பிரகாசித்த, பொதுவெளியில் அதிகம் பேசப்பட்ட முஸ்லிம் பெண்கள் பற்றிய தொகுப்பொன்றை அமெரிக்க இணையத்தள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

அரசியல் பிரவேசம், சமூக நீதிக்கான குரல்கொடுப்பு, தமது தொழில் துறையில் முதன்முதலில் ஹிஜாப் அணிதல், நிறைவான ஆளுமை, விவேகம், முற்போக்கு சிந்தனை என்ற ரீதியில் 2018 ஆம் ஆண்டில் பிரகாசித்த முஸ்லிம் பெண்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Ilhan Omar

Ilhan Omar அமெரிக்க காங்கிரஸுக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் சோமாலிய-அமெரிக்க வம்சாவளி முஸ்லிம் பெண் ஆவார். அதே நேரம் அமெரிக்க காங்கிரஸில் முதன் முதலில் ஹிஜாபுடன் செல்லும் நபராகவும் Ilhan Omar நோக்கப்படுகின்றார்.

சோமாலியாவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக கென்யா அகதி முகாமுக்கு Ilhan Omar இன் குடும்பம் சென்றது. அதன்பின் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து அமெரிக்க அரசியலில் தனது ஈடுபாட்டினை வெளிப்படுத்தி கடந்த 2018 நவம்பர் மாதத்தில் அமெரிக்க காங்கிரஸிற்கு தேர்வானார்.

Rashida Tlaib

Rashida Tlaib ஒரு பலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கராவார். இவரும் அமெரிக்க காங்கிரஸிற்கு கடந்த வருடம் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

காங்கிரஸ் உறுப்பினராவதற்கான சத்தியப் பிரமான நிகழ்வில் புனித அல்குஆன் பிரதியில் தான் சத்தியப்பிரமானம் எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவிப்புச் செய்திருந்தார்.

Tahera Rahman

அமெரிக்காவின் தொலைக்காட்சி வரலாற்றில் பிரபலமான தொலைக்காட்சி அலைவரிசையில் முழுநேர செய்தியாளராக பணிபுரிந்து வந்தார்.

2016 ஆம் ஆண்டில் Tahera Rahman, Local 4 News இல் (Producer) தயாரிப்பாளராக இணைந்துகொண்டார்.

எத்தகைய செய்திகளை ஒளிபரப்புவது? செய்திக்கான பிரதியை (Script) தயார் செய்வது. செய்திகளுக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் போன்ற முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் பொறுப்புள்ள சவால்கள் நிறைந்த துறையில் பணியாற்றும் முஸ்லிம் பெண் ஆக Tahera Rahman பார்க்கப்படுகின்றார்.

தொலைக்காட்சித் துறையில் பணியாற்ற வேண்டும் என்பதே Tahera Rahman னின் சிறுவயதுக் கனவாக இருந்தது. அந்தக் கனவினை நனவாக்கி அமெரிக்க தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலில் ஹிஜாப் அணிந்து உலகம் பூராவும் ஒலி-ஒளி அலைகளினூடு வலம் வந்துகொண்டிருக்கின்றார்.

Zahra Billoo

Council on American-Islamic Relations, San Francisco Bay Area (CAIR) என்ற அமைபின் நிறைவேற்றுப் பணிப்பாளராவார். 2018 இல் Zahra Billoo – “PACT” (People Acting in Community Together) பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட முஸ்லிம் பெண். பின்னர் பலஸ்தீன் ஆதரவாளர் என்ற காரணத்திற்காக, யூத ஆதரவு நிதிவழங்குனர்களின் அழுத்தம் காரணமாக “PACT” பதக்கம் திரும்பிப் பெறப்பட்டது.

Faeeza Vaid


சமத்துவத்திற்காகவும் நீதிக்காகவும் குரல்கொடுக்கும் Faeeza Vaid பிரிட்டனில் உள்ள உதவி வழங்கும் முஸ்லிம் தன்னார்வ நிறுவனம் ஒன்றின் பணிப்பாளராக இருந்து வருகின்றார்.

இவரது திறன் நிறைந்த செயற்பாட்டிற்காக எலிசபெத் மகாராணியினால் புதுவருடத்திற்குரிய பிரிட்டிஷ் பேரரசின் நன்மதிப்பைப் பெறும் மிகவும் சிறந்தவர்கள் மத்தியில் Faeeza Vaid உம் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அந்நாட்டின் பேரரசினால் கொடுக்கப்படும் விசேட கௌரவமாகும்.

Faeeza Vaid கடந்த 4 வருடங்களாக Muslim Women’s Network-UKஎனும் அமைப்பின் ஊடாக, கட்டாயத் திருமணத் திணிப்பு மற்றும் வன்முறை போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த 1700 இற்கு மேற்பட்ட பெண்களுக்கு அவ் அமைப்பின் ஊடாக உதவியிருக்கின்றார்.

2008 ஆம் ஆண்டு தனது 34 ஆவது வயதில் MWN இல் இணைந்துகொண்ட Faeeza Vaid 2011 ஆம் ஆண்டில் அவ் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராக மாறுகின்றார். அவர் சார்ந்த அவ் அமைப்பு 2017 ஆம் ஆண்டு சுமார் 800 பெண்கள் தொடர்பான துஷ்பிரயோகங்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றது. Faeeza Vaid இனரீதியான மீறல்களுக்கும் குரல் கொடுத்து வருகின்றார்.

Joohi Tahir

Joohi Tahir அவர்கள் விசேடமாக கவனிக்கப்படவேண்டிய அதாவது உடல், உள ரீதியில் இயலாமையில் உள்ள முஸ்லிம்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலவசமாக உதவக்கூடிய அமைப்பொன்றின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்து வருகின்றார். Muslims Helping and Understand Special Education Needs (MUHSEN) எனும் இவ் அமைப்பு அமெரிக்காவில் இயங்கி வருகின்றது.

MUHSEN அமைப்பின் ஊடாக வலதுகுறைந்தவர்களுக்கான உம்றாஹ் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு முதன் முதலில் 58 சிறுவர்களும் பெரியவர்களுமாக ஒரு குழு உம்றாவுக்கு சென்றது. MUHSEN அமைப்பின் உதவியாளர்கள் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை, Wheelchair இல் வைத்து தள்ளிச் செல்வது தொடர்ந்து அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அவர்களது வணக்கக் கடமைகளை இலகுவாக புரிவதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உதவியாக இருந்தனர். இதற்காக வேண்டி MUHSEN அமைப்பின் உதவியாளர்கள் நன்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று வலதுகுறைந்தவர்களைக் கருத்திற்கொண்டு, அவர்களின் தொழுகைக்காக வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் மஸ்ஜித்களுக்கு MUHSEN அமைப்பு சான்றிதழ்களை வழங்கி வருகின்றது. இவ்வாறு 31 மஸ்ஜித்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top