Article

அந்த 48 ஆயிரம் ரூபாய் பணம் உரியவருக்கு திரும்பக் கிடைத்ததா ? நடந்தது என்ன ?

நேற்று காரைதீவு இராணுவ முகாமை அண்டிய பகுதியில் பாதையோரம் பணப்பை ஒன்றை இருவர் கண்டெடுத்துள்ளனர்… கண்டெடுத்தவர்கள் அதை எடுத்துச்சென்றுவிட்டனர் . . .

அதன் பின்னர் அந்தப் பணப்பைக்கு நடந்தது என்ன ?

பணப்பையைக் கண்டெடுத்தவர்கள் உடனே வீட்டுக்குச் சென்று… அதை திறந்து பார்த்தவுடன் . . . அதில் 48 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணம் இருப்பதைக் கண்டிருக்கின்றனர் . . . பெறுமதியான ஆவணங்களும் அதில் காணப்பட்டிருக்கின்றன…

ஆனால் அவர்கள் பணப்பையை ஆராய்வதை நிறுத்தவில்லை. தேடுதல் வேட்டை தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றது . . .

அப்பாடா . . . அவர்கள் தேடியது கிடைத்துவிட்டது . . .

அந்தப் பணப்பை உரிமையாளரின் கடமை புரியும் அலுவலகத்தின் தொலைபேசி இலக்கத்தை . . . . பணப் பையிலிருந்து ஒருவாறு கண்டெடுத்துவிட்டனர் . . .

அம்பாறை நகரைச் சேர்ந்த சிங்களமொழி சகோதரரின் பணப்பையே அது . . .

அவர் காரைதீவு பிரதேச சபையில் கடமைபுரிபவராவார். அவரது அலுவலகமான காரைதீவு பிரதேச சபையின் தொலைபேசி இலக்கத்துடன் கூடிய அடையாள அட்டையை பார்த்தவுடன்தான் பணப்பையை கண்டெடுத்தவர்களின் உள்ளம் … தண்ணீரை எதிர்பார்த்து வரண்டு கிடந்த வயலுக்கு மழைகிடைத்தது போல . . . உள்ளம் பூரிப்படைந்தது . . .

பணப்பையை கண்டெடுத்தவர்கள் உடனே . . .  காரைதீவு பிரதேச சபையுடன் தொடர்பை ஏற்படுத்தி குறிப்பிட்ட நபர்தொடர்பில் வினவியதோடு தமது தொலைபேசி இலக்கதைக் கொடுத்தும் இருக்கின்றனர்.

சற்றுநேரத்தில் பணப்பையை தொலைத்த நபர், பணப்பையை கண்டெடுத்த நபர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தியிருக்கின்றார். பணப்பையை கண்டெடுத்தவர்கள் பணப்பை உரிமையாளரை தமது இருப்பிடத்துக்கு அழைத்திருக்கின்றனர். . .

அதன் பின் நடந்ததென்ன ?

பணப்பையைக் கண்டெடுத்த நபர்களின் வீட்டுக்குச் சென்ற பணப்பை உரிமையாளர், எனது பெறுமதிமிக்க ஆவணங்களை பாதுகாத்து என்னிடம் தரவும் செய்த உங்களை மறக்கமாட்டேன் . . . அதற்காக இப் பணத்தினை வைத்துக்கொள்ளுங்கள் என்று ரூபா 48,000/= இற்கு மேற்பட்ட பணத்தினை, பணப்பையைக் கண்டெடுத்தவர்களிடம் கொடுத்திருக்கின்றார் . . .

பொங்கி எழுந்தார்கள்: பணப்பையைக் கண்டெடுத்தவர்கள் பொங்கியெழுந்தார்கள். . . நாங்கள் பணத்தை எதிர்பார்த்து உங்களிடம் இப் பணப்பையை ஒப்படைக்கவில்லை. கண்டெடுத்தோம். . .  உரியவரிடம் ஒப்படைப்பது எமது கடமை . . . அதனால்தான் உங்களிடம் ஒப்படைத்தோம் . . .  என்று உரிமையாளரிடம் தெரிவித்தனர்.

நெகிழ்ந்து போனார் : பணப்பை உரிமையாளர் நெகிழ்ந்துபோனார். . .  உண்மையில் இப் பணப்பை உங்களிடம் கிடைத்ததால்தான். . . எனது கைக்கு மீளவும் கிடைத்திருக்கின்றது. . என்று கூரிய பணப்பை உரிமையாளர் . . . முஸ்லிம் சமுகத்தினரின் இவ்வாறான நற்செயல்களைக் கேள்விப்பட்டிருக்கும் நான் . . இன்று அதனை நேரடியாகக் கண்டுகொண்டதாகக் குறிப்பிட்டார் . . .

சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பற்றிய புரிதலுடன் சிங்கள மொழிச் சகோதரர் விடைபெற்றுச் சென்றார் . . .

பணத்தை கண்டெடுத்த சகோ. இல்யாஸ் மற்றும் அவரது மாமனாரிடமிருந்தும், பண உரிமையாளர் பணப்பையைப் பெற்றுக்கொள்ளும் போது . . .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top