News

அல்-ஹிலால் வித்தியாலயத்தில் மர்ஹுமா ஏ.எல்.ஜமீலா ஆசிரியைக்கு துஆப் பிராத்தனை.

அல்-ஹிலால் வித்தியாலயத்தில் மர்ஹுமா ஏ.எல்.ஜமீலா ஆசிரியைக்கு துஆப் பிராத்தனை.

கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த ஏ.எல்.ஜமீலா ஆசிரியை அவர்கள், கடந்த 30.04.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

இதனை முன்னிட்டு மர்ஹுமா ஏ.எல். ஜமீலா ஆசிரியை அவர்களுக்காக துஆ இரைஞ்சும் நிகழ்வு அல்-ஹிலால் வித்தியாலயத்தில், பாடசாலையின் அதிபர் UL நசார் Sir அவர்களின் தலைமையில் இன்று (04.05.2023) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இப் பிராத்தனை நிகழ்வுகள் இரண்டு கட்டங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முதலில் காலைக்கூட்டத்தில் மாணவர்கள், மர்ஹுமா ஏ.எல். ஜமீலா ஆசிரியை அவர்களுக்காக பிராத்தனைகளில் கலந்துகொண்டனர்.

பாடசாலையின் அதிபர் UL நசார் Sir அவர்களினால், மர்ஹுமா ஏ. எல். ஜமீலா ஆசிரியை அவர்கள் நினைவுகூறப்பட்டதன் பின்னர், மௌலவி AHM பஹ்மி (உஸ்மானி)
தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அவர்களினால் விசேட துஆப் பிராத்தனை இடம்பெற்றது.

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், மர்ஹுமா ஏ. எல். ஜமீலா ஆசிரியை அவர்களின் கணவர் உட்பட குடும்பத்தினர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

துஆ இரைஞ்சும் நிகழ்வின் இரண்டாம் கட்டம், பாடசாலையின் அதிபர் UL நசார் Sir அவர்களின் தலைமையில் பாடசாலை முடிவடையும் நேரத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் அதிபர் UL நசார் Sir அவர்கள் உரையாற்றும்போது,

“அனைவரிடமும் அன்பாக பழகிய ஒருவரை…,
எவரது மனதையும் நோகடிக்காத ஒருவரை…
நாம் இழந்து நிற்கின்றோம்.
இறைவனின் ஏற்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ள  வேண்டியுள்ளது. ஆண், பெண்களுக்கு இறுதி இலக்கான சுவனத்தை அடைந்து கொள்வது இக்கால கட்டத்தில் சவால் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. ஆனால் எம்மை விட்டுப் பிரிந்த மர்ஹுமா ஏ. எல். ஜமீலா ஆசிரியை அவர்கள் அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்தாதவர்களாவார்கள். இறைவனை தொடர்ந்தும் நினைவுகூறக் கூடியவர்களாவார்கள். அன்னார் சுவனப் பூஞ்சோலையில் பிரவேசிக்க பிராத்திக்கின்றோம்.”
என்று தனது உரையில் குறிப்பிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து மௌலவி அன்சார் ஆசிரியர் அவர்களினால் விசேட துஆப் பிராத்தனை இடம்பெற்றது. இந்நிகழ்வில் மர்ஹுமா ஏ. எல். ஜமீலா ஆசிரியை அவர்களின் கணவர் உட்பட குடும்பத்தினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் புகைப்படங்களைப் பார்வையிட (Click)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top