Article

பேரறிஞர் A.M.A. அஸீஸ் அவர்களும் கலாநிதி M.A.M சுக்ரி அவர்களும்.

பேரறிஞர் A.M.A. அஸீஸ் அவர்களும் கலாநிதி M.A.M சுக்ரி அவர்களும்.

இலங்கை முஸ்லிம்களின் சமயம் சார்ந்த கல்வி வரலாற்றில் ஒரே சிந்தனையுடன் பயணித்த இரு வேறு ஜாம்பவான்களாக இருவரையும் அடையாளப்படுத்த முடியும். இருவரும் ஆசிரிய – மாணவர் உறவைக் கொண்டவர்கள். A.M.A.AZEEZ எனும் மாபெரும் ஆகர்ஷனமும் ஆளுமையும் மிக்க தனது ஆசிரியரின் தாக்கம் முழுவதுமாக அவரிடம் ஊடுருவி ஆட்கொண்டதை காணலாம்.

அறிஞர் A.M.A. அஸீஸ் அவர்களது எல்லா வகையான அறிவுபூர்வமான கனவுகளையும் பின்னாட்களில் முழுமைப்படுத்தியவராக கலாநிதி M.A.M. ஷுக்ரியை காணலாம்.

கலாநிதி M.A.M. சுக்ரி ஆங்கிலத்தில் கை தேர்ந்த புலமை பெற்றமை, இலக்கிய துறையில் ஈடுபாடு காட்டியமை, எழுத்து துறையில் கால்பதித்து நின்றமை, ஸூபித்துவ சிந்தனை மீது பேரார்வம் கொண்டமை, sir செய்யது அஹ்மது கான் , ஜமாலுத்தீன் அப்கானி , முஹம்மது அப்துஹு போன்றோர் மீது அதீத ஈடுபாடு கொண்டமை, அல்லாமா இக்பாலின் கவிதைகள் மீது தீராத தாகம் கொண்டமை, அரபுத் தமிழுக்கு அருந் தொண்டாற்றியமை, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை தொகுத்தமை, (வாப்பிசி மரிக்காரின் மகனாகிய, சட்டசபையின் முதலாவது முஸ்லிம் உறுப்பினராகிய w.m. அப்துர் ரஹ்மான் காலத்தில் இலங்கை பூர்வீக சோனகர் பற்றிய சர்ச்சை எழுந்த போது இலங்கை முஸ்லிம்கள் மதம் மாறிய தமிழர்களே என்ற ஒரு புரளியை பொன்னம்பலம் ராமநாதன் எழுப்ப ILM அஸீஸ் இதனை மறுத்து இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை இன்னொரு நூலில் நிறுவினார். இதன் நீட்சியாகவே கலாநிதி சுக்ரி அவர்களின் வரலாற்றுப் பணியையும் நோக்க வேண்டும்.

அத்துடன் அறிஞர் அஸீஸ் அவர்கள் மேற்கு நாடு ஒன்றில் வரலாற்று துறையில் கற்று கலாநிதிப் பட்டம் பெற இருந்த நிலையில் தான் தற்செயலாக இடையில் இன்னொரு துறைக்கு மாற வேண்டி ஏற்பட்டது. இந்த இடத்திலும் கலாநிதி சுக்ரி அவர்கள் I.L.M. அஸீஸ் மற்றும் A.M.A.அஸீஸ் அவர்கள் இருவரதும் வரலாற்று பணியின் தொடர்ச்சியை முழுமைப்படுத்தி விடுகிறார்கள்)

A.M.A. அஸீஸ் அவர்களது தலை சிறந்த ஆங்கில கட்டுரைகளை அழகுற மொழி பெயர்த்தவர்கள் கலாநிதி ஷுக்ரியும் பேராசிரியர் கா.சிவத்தம்பியும் தான் என்பது சுவையான மற்றும் ஒரு தகவல்.

இலங்கை அறிஞர் A.M.A. அஸீஸ் அவர்கள் 1941 களில் கண்ட கனவு 1960 களில் எமக்கு ஒரு ஜாமியா கருத்திட்டத்தை இலங்கையில் இஸ்லாம் எனும் நூலில் மீளவும் பிரசுரித்து 1973 களில் அதனை பேருவளை ஜாமியா நளீமியா வாக முழுமைப்படுத்தி தான் மரணமாகும் வரை அதற்காக அர்ப்பணித்தமை அதன் வளர்ச்சிக்கு பங்காற்றியமை போன்ற எண்ணற்ற வரலாற்றுப்பணிகளை செய்துள்ளமை கண்கூடு.

இந்த அத்தனை துறைகள் மீதும் அறிஞர் A.M.A அஸீஸ் அவர்களும் அலாதியான ஈடுபாடு கொண்டிருந்தார். அறிஞர் M.A.M. அஸீஸ் அவர்களது கனவுகளை அப்படியே சுதந்திர் சிந்தனையுடன் அவரது வார்ப்புடன் இஷ்டப்படுத்தும் தலை சிறந்த உண்மை மாணவனாகவே கலாநிதி M.A.M. ஷுக்ரி தொண்டாற்றியுள்ளார்.

கலாநிதி M.A.M. சுக்ரி அவர்களின் நேரடி மாணவர்கள் நாம். ஆனால் அறிஞர் A. M. A. அஸீஸ் அவர்களை அவரது நூல்கள் வாயிலாகவும், அவர்கள் குறித்து பிறரால் எஹுதப்பட்ட ஆய்வுகள் வழியாகவும் இலங்கையில் இஸ்லாம், மிஸ்ரின் வசியம்) கருத்துக்கள் சிந்தனைகள் வாயிலாகவும் தான் அறிய முடிகிறது. அறிஞர் அஸீஸ் அவர்களது சிந்தனைகளை அப்படியே அமுலாக்கும் வகையில் அதற்கான அத்துனை ஆற்றல்களையும் கொடுத்து தான் இறைவன் கலாநிதி சுக்ரி அவர்களை படைத்துள்ளானோ என்றும் என்றும் ஓர் எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியாது.

1956 களில் கலாநிதி சுக்ரி உயர்தரம் கற்க கொழும்பு ஸாஹிராவுக்கு சென்ற போது அங்கு அதிபராக கடமையாற்றும் அறிஞர் A.M.A. அஸீஸ் அவர்களது பொற்காலமாக இருந்தது. தெற்கின் சென் தோமஸும், தர்கா நகர் ஹம்ராவும் இணைந்து வார்த்து குழைத்த கலவையை ஸாஹிரா தான் செதுக்கி சிற்பமாக்கி சமூகத்துக்கு விட்டது என்றால் பிழையாகாது. ஸாஹிராவில் தன்னை வளர்த்து புடம் போட்டு பேராதனை சென்று உயர் கல்வியை தொடர்கையில் ஏற்பட்ட பாடத் தெரிவு சிக்கலின் போது தனது ஆசிரியரும் வழிகாட்டியுமான அறிஞர் A.M.A. அஸீஸ் அவர்கள் தான் அரபு மொழியை சிறப்புத் துறையாக தெரிவு செய்ய வழிகாட்டினார் என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள்.

அதே போல 1965 களில் பேராதனை பல்கலையில் சிறப்புத்துறையில் சிறப்பான முதல் நிலை மாணவனாகி நிர்வாக சேவையில் இணைய நாடிய போது தனது அதிபரும் ஆசானும் வழிகாட்டியுமான AMA அஸீஸ் அவர்களது ஆலோசனையின் படி பேராசிரியர் இமாமின் விருப்பப்படி கல்வித்துறையில் உயர்ந்து விளங்கும் வாரிசாக மிளிர வேண்டும் என்பதற்காக கல்விகல்வித்துறையை தெரிவு செய்து இறுதி மூச்சு வரை பயணித்தார்.

நளீமியா உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டாலும் அதற்கான முறையான நவீன கலைத்திட்டம் ஒன்று இல்லாமையால இஸ்லாமிய நாடு ஒன்றிற்குச்சென்று அங்குள்ள கலைத்திட்டங்களை ஆய்வு செய்து வருவதே உகந்ததது என்று அறிஞர் அஸீஸ் கூறியதற்கிணங்க 1972 களில் பாகிஸ்தான் நோக்கி பயணித்த குழுவிலும் கலாநிதி சுக்ரி இடம்பெற்றார்.

1974 களில் ஜாமியாவின் நிர்வாகத்தை பொறுப்பேற்குமாறு கலாநிதி சுக்ரி அவர்களுக்கு நளீம் ஹாஜியார் ஹொங்கொங் இல் இருந்தவாறு கடிதம் அனுப்புகிறார். கலாநிதிப் பட்டத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பி நளீமியாவின் பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற வேண்டுதலே அது.

நீண்ட மனபோராட்டதின் பின்னர் 1981 April மாதமளவில் கலாநிதி M.A.M. சுக்ரி அவர்கள் நளீமியாவின் பணிப்பாளராக மாறுகிறார். நளீமியா உருவாக்கத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்த அறிஞர் A.M.A. அஸீஸ் அவர்கள் நளீமியா ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களில் மரணமைடைகிறார். அதற்கு முந்திய வருடம் தனது மனைவி உம்மு குல்தும் அவர்கள் மரணித்த ஆறாத்துயர் அவரையும் அடுத்த வருடம் வபாத் ஆக்கும் அளவு கவலை நீண்டது என்று சொல்லப்படுகிறது.

இருப்பினும் அவரது கனவை அவர் உருவாக்கிய மாணவரான MAM சுக்ரி அவர்கள் மிகவும் உய்யர்ந்த தரத்தில் நிறைவேற்றி தனது ஆசானும் அதிபருமாகிய AMA அஸீஸ் கண்ட கனவை நிறைவேற்றினார்.

✍🏻 M.M.A.BISTHAMY ✍🏻

மேலும் இவைபோன்ற செய்திகளைப் பெற்றுக்கொள்ள நிகழ்வுமேடை Whatsapp Group இல் இணைந்துகொள்ளுங்கள்.

நிகழ்வுமேடை Nikalvumedai

Joint With நிகழ்வுமேடை Whatsapp Group.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top