Cultural Events

தேர­ருக்கு வட்­டி­லாப்பம் வழங்கிய மௌலவிகள்.. இது கருத்தடை வட்டிலாப்பம் அல்ல.

தேர­ருக்கு வட்­டி­லாப்பம் வழங்கிய மௌலவிகள்.. இது கருத்தடை வட்டிலாப்பம் அல்ல.

தேர­ருக்கு வட்­டி­லாப்பம் வழங்கிய மௌலவிகள்.. இது கருத்தடை வட்டிலாப்பம் அல்ல.

நாட்டு மக்­களை ஒரு போதும் பிள­வு­ப­டுத்­தக்­கூ­டாது. என உமந்­தாவ குளோபல் (உல­க­ளா­விய) பெளத்த கிரா­மத்தின் மத குரு ஸ்ரீ சமந்­த­பத்ர தன்னைச் சந்­திக்க வந்த சுமார் 80 மெள­ல­விகள், மத்­ரஸா மாண­வர்­க­ளிடம் தெரி­வித்தார்.

மெல்­சி­ரி­புர மாஹி­வல உஸ்­வதுல் ஹஸ்னா மத்­ரஸா மாண­வர்கள், மெள­ல­விகள் தேர­ருக்கு வட்­டி­லாப்பம் தான­மாக வழங்­கி­னார்கள்.

அவர்­களை அன்­புடன் வர­வேற்ற ஸ்ரீ சமந்­த­பத்ர தேரர் அவர்கள் மத்­தியில் மத்­தியில் உரை­யாற்­று­கை­யிலே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்

‘நட்­பு­ற­வுக்கு உதா­ர­ண­மாக நீங்கள் வட்­டி­லப்பம் சுமந்து வந்­தி­ருக்­கி­றீர்கள். நான் மன நிறை­வுடன் இதனை ருசி பார்க்க விரும்­பு­கிறேன்.

இது கருத்­தடை வட்­டி­லாப்பம் அல்ல. முஸ்­லிம்­களின் வட்­டி­லாப்பம் உண்­ப­தற்கும், நோன்புக் கஞ்சி குடிப்­ப­தற்கும் நாம் மிகவும் ஆசைப்­ப­டு­கிறோம். இதுதான் எமது ஒற்­றுமை. இப்­ப­டித்தான் நாம் வாழ்ந்து பழ­கி­யுள்ளோம்.

இன்று சுமார் 80 மெள­ல­விகள் என்னைச் சந்­திக்க வந்­தி­ருக்­கி­றார்கள். இதனை கருத்­தடை உணவு என்று பொய் கூறா­தீர்கள். இப்­ப­டிக்­கூறி மக்­க­ளுக்­கி­டையில் சண்டை மூட்­டா­தீர்கள்.

நாங்கள் நல்­லி­ணக்­கத்­து­டனும், ஒற்­று­மை­யு­ட­னுமே வாழ விரும்­பு­கிறோம். எங்­களை பிள­வு­ப­டுத்­தி­வி­டா­தீர்கள். இவ்­வா­றான ஒற்­று­மையே எங்களுக்குத் தேவை.

நீங்கள் எப்­போ­தென்­றாலும் இங்கு வரலாம். நாங்­களும் உங்­களைப் பார்க்க வருவோம். இந் நாட்டில் நாங்கள் இரு சாராரும் சமா­தா­ன­மா­கவும் ஒற்­று­மை­யா­க­வுமே இருக்­கிறோம். நாம­னை­வரும் ஒரே நாட்டின் மக்கள். நாங்கள் பிள­வுபட்­டி­ருக்­கக்­கூ­டாது. எங்­க­ளுக்குள் ஒற்­றுமை நிலவா­விட்டால் எங்கள் நாடு முன்­னேற்­ற­ம­டை­யாது.

நாட்டு மக்­களை பிள­வு­ப­டுத்த வேண்டாம் என அனை­வ­ரையும் கேட்­டுக்­கொள்­கிறேன்.

மக்கள் உணவில் ஒரு­போதும் விஷம் கலக்க மாட்­டார்கள். கருத்­தடை கொத்து, உணவு என்று பொய் கூற­வேண்டாம் என்று நான் கேட்­டுக்­கொள்­கிறேன்.

நாங்கள் அனை­வரும் அபி­வி­ருத்­தியை நோக்கி ஒன்­றி­ணைந்து பய­ணிப்போம் என்றார்.

நல்லெண்ண விஜ­யத்தில் பங்கு கொண்ட மாஹி­வல உஸ்­வதுல் ஹஸ்னா அர­புக்­கல்­லூ­ரியின் ஆசி­ரியர் ஏ.எச்.ஹம்ஸா (ஹாஷிமி) இது தொடர்பில் ‘விடி­வெள்­ளி’க்குக் கருத்துத் தெரி­விக்­கையில்;

உமந்­தாவ குளோபல் பெளத்த கிரா­மத்தின் பன்­ச­லையின் ஸ்ரீ சமந்­த­பத்ர தேரரை எமது மத்­ர­ஸா­வுக்கு விஜயம் மேற்­கொள்­ளு­மாறு அழைப்பு விடுத்­தி­ருக்­கிறோம். தேரர் கடந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட கருத்­தடை கொத்­து­ரொட்டி போன்ற பொய் பிர­சா­ரங்­க­ளுக்கு பதில் வெளி­யிட்டார். எதிர்ப்புத் தெரி­வித்தார்.

முஸ்­லிம்­களுக்கும், பெரும்­பான்­மை­யி­ன­ருக்கும் இடை­யி­் மனக்­க­சப்­பு­க­ளுக்கு இட­மே­யில்லை என்றார். இவ்­வா­றான நல்­லி­ணக்க விஜ­யங்கள் நாட்டின் நலா­பு­றமும் ஏற்­பாடு செய்­யப்­ப­ட­வேண்டும். மாண­வர்கள் மத்­தியில் நல்­லி­ணக்கம் பலப்­ப­டுத்­த­பட வேண்டும் என்றார்.

குறிப்­பிட்ட விஜ­யத்தில் மாண­வர்­க­ளுடன் உஸ்­வதுல் ஹஸ்னா அர­புக்­கல்­லூரி அதிபர் எச்.எம்.முஸ்தாக் (ரஹ்மானி) உட்பட ஆசிரியர்கள் ஏ.எச்.ஹம்ஸா (ஹாஷிமி), எம்.எஸ்.எம்.நிஹார்தீன் (வுஸ்வி) ஏ.ஆர்.எம். இம்ரான் (நூரி), எம்.ஜே.எம்.இம்ஷாத் (இஹ்ஸானி), எம்.சி.எம்.அக்ரம் (ஹாஷிமி), ஏ.எல்.எம்.அஸ்லி (ஹாபிலி), எம்.டப்ளியு. எம். நிம்ஷாத் (வுஸ்வி), எம்.எஸ்.எம்.நபீல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நன்றி – விடிவெள்ளி.

– – – – – – – – – – – – – – – – – – – –

நிகழ்வுமேடையில் வெளிவரும் வரலாறுகள் ஆளுமைகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top