Other Events

இலங்கை முஸ்லிம்களின் தொன்மை மற்றும் பூர்வீகம் குறித்த மாற்றுப்பார்வை.

இலங்கை முஸ்லிம்களின் தொன்மை மற்றும் பூர்வீகம் குறித்த மாற்றுப்பார்வை.

ஆய்வாளரும் நூல் விமர்சகரும் பன்முக எழுத்தாளருமான M.M.A.BISTHAMY  எழுதிய… இலங்கை முஸ்லிம்களின் தொன்மை மற்றும் பூர்வீகம் குறித்த மாற்றுப்பார்வை.

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு தொன்மங்கள் குறித்தான ஆய்வுகளும் அலசல்களும் இடம்பெறும் நிலையில் இலங்கை முஸ்லிம்களின் உண்மையான வரலாறு அராபிய மூலங்களில் இருந்து தோற்றம் பெற்றதா
அல்லது தென்னிந்திய தொடர்புகளால் தோன்றியதா என்ற
வாதம் நீள்கிறது.

நபிகளாரின் வருகைக்கு முன்பே வர்த்தக வியாபார தொடர்புகள் இங்கு நிலவின.

இங்கு வந்த எந்த அராபிய தென்னிந்திய வியாபாரிகளும் குடும்பமாக வரவேயில்லை தனியாக சிங்கிளாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் அரபிகளின் வழிநின்று இங்கு வாழ்ந்தவர்கள் தோற்றுவித்த அரபுத்தமிழ் குறித்த பரப்பு போலன்றி..

தென்னிந்திய வழியிலான தமிழ் இங்கு மாகாணத்துக்கு மாகாணம் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுவதும்
நோக்கத்தக்கது.

அரபு மறைந்து தமிழே நிலைத்து வேர்விட்டுள்ளது.

ஆதத்தின் பாதச்சுவடு இருந்ததால் இங்கு ஆரம்ப குடியேற்றங்கள் தோன்றி இருக்கலாம்.

அது பல்கி பெருகி அரபு நாட்டவரை இங்கு வரவைத்திருக்கலாம்.

இங்கு ஏலவே வாழ்ந்தவர்களுக்கு சமயம் போதிக்க தென்னிந்திய ஞானிகளும் வியாபாரிகளும் வந்திருக்கலாம்.

1344 இல் பதூதா இங்கு வந்துள்ளதாக தகவல் இருப்பினும் அதற்கு முன்னரே இங்கு ஒரு சமுகம் வாழ்ந்து பல்கிப்பெருகி
அந்த தகவல் எப்படியோ
உலகின் மூலை முடுக்கெங்கும் பரவி இருக்க வேண்டும் அதனடியாகவே அவர்கள் இங்கு வந்திருக்க வேண்டும்.

1505 களில் தற்செயலாக தான் போர்த்துக்கேய காலனியம் இங்கு கால் பதிக்கிறது.

ஆனால் அதற்கு முன்னமே
முஸ்லிம்கள் அரபு தேச தொடர்பு பேணியுள்ளனர்.

தூர தேச அரபிகளே இப்படி தொடர்பு பேணி உள்ளனர் என்றால் அயல் தேச பாரதம் அங்குள்ளவர்கள் அதற்கு முன்னர் அகன்ற தொடர்புகள் இதை விட பலமாக பேணி இருக்க வேண்டும்.

காலத்தால் முந்திய தமிழ் தானே இன்று
முஸ்லிம்களின் பேச்சு வழக்காக கல்வி மொழியாக நிலைத்துள்ளது.

அரபு மேலதிக மொழியாகவும்
தமிழ் ஆரம்ப மொழியாகவும் தான் இருந்திருக்க வேண்டும்.

தமிழை தானே அரபு எழுத்துக்கள் வழியாக எழுதினார்களே ஒழிய,

அரபை தமிழ் சொற்களால் எழுதவில்லையே….

அனேகமாக சகவாழ்வு குறித்து பேசுவோர் முஸ்லிம் சிங்கள சகவாழ்வு குறித்து பேசுவது போல முஸ்லிம் தமிழ்
சகவாழ்வு குறித்து பேச எழுத ஆய்வு செய்ய தொடங்கினால் புதிய
மக்கள் மீதான
ஒளிப்பாய்ச்சல்களை கண்டு கொள்ளலாம்.

அரபு தான் ஆரம்பம் எனில் அதுதான் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும்
நிலைத்திருக்க வேண்டும்.

ஆனால் அங்கும் இங்கும் இன்றுவரை பரவலாக நிலைத்து உள்ளது பழந்தமிழ் தானே….

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top