Muslim History

Myanmar அணைக்கட்டு வெடிப்பு, ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதி.

Myanmar அணைக்கட்டு வெடிப்பு
Myanmar அணைக்கட்டு வெடிப்பு, ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதி.

√ 100 க்கு மேற்பட்ட கிராமங்களில் நீர் உட்புகுந்தது.
√ மியன்மாரின் முக்கிய போக்குவரத்துப் பாதையிலும் வெள்ளம்.

Myanmar அணைக்கட்டு வெடிப்பு

August 29 புதன் 2018 அதிகாலை 5.30 மணியளவில் மத்திய மியன்மாரில் உள்ள அணைக்கட்டு ஒன்றின் வான்கதவு உடைப்பெடுத்ததனால், 100க்கு மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் உட்புகுந்தது. தற்போதைய கணக்கின்படி 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நிர்க்கதி நிலையில் உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

Swar Chaung என்ற அணைக்கட்டே இவ் அனர்த்த நிலைக்கு உள்ளானது. மத்திய மியன்மாரின் Bago பிராந்தியத்தில் உள்ள Yedashe என்ற நகரத்தின் அருகில் காணப்பட்ட அணைக்கட்டே இதுவாகும். கடந்த திங்கள் (27) அணைக்கட்டில் நீர் பெருகிக் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்தே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

ஏக்கர் கணக்கான நெற் காணிகளும், வீடுகளும் கடைத்தெருக்களும் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றது.

மியன்மாரின் பொறுப்புவாய்ந்த எந்தத் தரப்பினரும் இதுவரைக்கும் சேத விபரம் தொடர்பில் எதுவித அறிவித்தலையும் விடவில்லை. தற்காலிகமாக அணையை மீறிவரும் நீரைத் தடுத்து நிறுத்த ஆராய்ந்து வருவதாக மட்டுமே அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.

150,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

Myanmar அணைக்கட்டு வெடிப்பு

Myanmar அணைக்கட்டு வெடிப்பு

இவ் அனர்த்தம் தொடர்பாக மியன்மார் அரசாங்கத்தால் எதுவித முன்னறிவித்தல் எச்சரிக்கைகளும் விடுக்கப்படவில்லை என மக்கள் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். திடீரென வெள்ளம் ஊருக்குல் உட்புகுந்ததால், மூட்டை முடிச்சுக்களை எடுத்துவர முடியவில்லை என உயிர் தப்பிய சிலர் கருத்துத் தெரிவித்தனர். வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள பொருட்களை வெள்ளம் அடித்துக் கொண்டு சென்றுவிட்டதாக மக்கள் மேலும் அங்கலாய்க்கின்றனர். பல வீடுகள் உடைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரமாக சீறி வரும் வெள்ள நீர் காணொளி..

வங்காளதேசத்தை எல்லையாகக் கொண்ட மியன்மாரின் ரோஹின்ய பிரதேசத்தில் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றபோது ஐ.நா உட்பட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரசன்னத்தை மியன்மார் அரசு தன் நாட்டின் இறைமையைக் காரணம் காட்டி மறுத்து வந்தது. தற்போதும் மியன்மாரின் மத்திய பகுதியில் இயற்கை, அழிவை ஏற்படுத்தியிருக்கின்றது. தற்போதும் இறைமையைக் காரணம் காட்டி உதவி வழங்கும் நிறுவனங்களின் பிரசன்னத்தை மியன்மார் அரசு மறுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top