Article

Soft Power இராஜதந்திரம். . .

Soft Power இராஜதந்திரம். . .

|| Soft Power என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அரசுகள் தமது இராணுவ மற்றும் உளவுத்துறை பலத்துக்கு மேலதிகமாக இன்றைய சர்வதேச அரங்கில் தம்மைப் பற்றிய Image Buildingகிற்காகவும், தமது பேரம் பேசும் சக்தியை வளர்த்துக் கொள்வதற்காகவும் இந்த Soft Powerஐ அதிகம் பயன்படுத்துகின்றன.

அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியாக ‘வளர்ச்சியடைந்த’ நாடுகள் இந்த Image Building இல் அதிகூடிய கவனம் செலுத்துவதை அவதானிக்கலாம். இராணுவ ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் என்ன கூத்துக் காட்டினாலும் உலகளாவிய ரீதியில் மக்கள் மனங்களில் தம்மைப் பற்றிய நல்லெண்ணம் மட்டுமே எஞ்சியிருக்க வேண்டும் என்பதுதான் இதன் முக்கிய நோக்கமே. எந்த ‘இஸ்ம்’ ஆட்சி செய்தாலும் இறுதியில் மக்கள் கருத்தில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து யாராலும் வெளியே வர முடியாது என்பதற்கு இது நல்ல உதாரணம்.

இந்த Image Building இல் முக்கியமான கருவியாகப் பயன்படுத்தப்படுபவையாக திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் இருக்கின்றன. நிஜத்தில் நடப்பதில் தம் பக்க நியாயத்தையும் அடுத்த பக்கத்தின் அநியாயத்தையும் மட்டும் கவனமாக பிரித்தெடுத்து, தம் பக்கத்தை Glamourize பண்ணியும் அடுத்த பக்கத்தை முற்றிலுமாக Sabotage பண்ணியும் திரையில் காண்பிப்பதனூடாக சர்வதேச மக்கள் கருத்தை தமக்குச் சார்பானதாக மாற்றிக் கொள்வதற்கு, திரைப்படங்கள் கொண்டிருக்கின்ற இயலுமையை வேறு எந்த ஊடகமும் கொண்டில்லை என்று அடித்துச் சொல்லி விடலாம். ||

The Spy எனும் Netflix series பற்றி சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு திரைவிமர்சனத்தில் நான் மேற்படி பத்தியை எழுதியிருந்தேன். இப்போது இந்த soft powerஇன் இன்னொரு வெளிப்பாடான sports பற்றி ஒரு பார்வைக்கான முன்னுரையாகவே அதனை மீண்டும் பதிகிறேன்.

நிகழ்வுமேடை Nikalvumedai

Joint With நிகழ்வுமேடை Whatsapp Group.

கட்டாரைப் பொருத்தவரையில் உலக அரங்கில் தனது புவியியல் அமைவிடத்தாலோ, அல்லது பரப்பெல்லையினாலோ, அல்லது மக்கள் தொகையினாலோ, அல்லது இராணுவ பலத்தினாலோ அடைந்துகொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

ஏற்கனவே மிகச் சிறந்த முறையில் soft power strategy யைக் கையாண்டு வரும் நாடுகளுள் கட்டாருக்கு குறிப்பிடத்தக்க இடம் இருக்கிறது. அந்த வகையில் இந்த உலகக்கிண்ணத் தொடரும் கட்டாரின் soft power strategyயில் ஒரு மிகப்பெரிய boost ஐ ஏற்படுத்தும் என கணிக்கலாம்.

கட்டார் – சவூதி முறுகல் ஏற்படுவதற்கெல்லாம் முன்னர், இற்றைக்கு 12 வருடங்களுக்கு முன்பதாகவே 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரை நடாத்துவதற்கான வாய்ப்பை கட்டார் தன்வயப்படுத்தியிருந்தது. அயலவர்களுடன் ஏற்பட்ட முறுகல் நிலையின் போதும் கட்டார் மிகவும் திறமையான முறையில் தனது உயரத்துக்கும் வயதுக்கும் மீறிய முதிர்ச்சியை வெளிப்படுத்தி வந்ததன் பின்னணியில் கட்டாரின் soft power strategyயின் கரம் இருந்தது.

இப்போது நடைபெறும் இந்த உலகக் கிண்ணத் தொடரை மிகவும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், அதே நேரம் பெரும் ஆரவாரத்துடனும் நடாத்தி முடிப்பதன் பின்னால் கட்டாரின் soft power இன்னும் பல மடங்கு அதிகரிக்கப் போகிறது. அதனூடாக கட்டார் அடுத்து வரும் தசாப்தங்களில் பின்வரும் அடைவுகளை அடையக்கூடும்.

1. உலகத் தரம் வாய்ந்த நிகழ்வுகளை ஆடம்பரமாகவும் அமைதியாகவும் நடாத்தக்கூடிய universal host ஆக கட்டார் பொதுவாக அங்கீகரிக்கப்படும்.

2. கட்டாரின் வெளியுறவுக் கொள்கையானது சூழவுள்ள ஏனைய மத்திய கிழக்கு நாடுகளது வெளியுறவுக் கொள்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதான ஒரு global player ஆக கட்டாரை மாற்றும் வகையில் புதுவடிவம் பெறலாம்.

3. வேலை வாய்ப்பு, வாழ்க்கைத்தரம், சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆகிய மூன்றும் கட்டாரின் மீதான சர்வதேச முதலீட்டு ஈர்ப்பை வெகுவாக அதிகரிக்கச் செய்யும்.

4. ஆன்மீகச்சாயல் கொண்ட சில மேலதிக நிறப்பூச்சுக்களும், கலாச்சார நிகழ்வுகளும் முஸ்லிம் உலக சிவில் சமூகத்துக்குள் கட்டாரைப் பற்றிய ஒரு மீட்பர் மனோநிலையை ஏற்படுத்த மிகவுமே போதுமானவை.

சமூக மற்றும் பொருளாதார ரீதியான குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றங்களையும், உலக அரங்கில் தான் வகிக்க விரும்பும் பாத்திரத்துக்கான கட்டாரின் opportunity cost ஆக எது அமையப் போகிறது என்பதனையும் உலகக்கிண்ணத் தொடரின் நிறைவையடுத்து வரும் ஓரிரு வருடங்களுக்குள் படிப்படியாக காண முடியுமாக இருக்கும்.

Soft power boost இற்காக கத்தியின் மீது நடக்கும் ஒரு விளையாட்டிலேயே கட்டார் இறங்கியுள்ளது. கட்டாரின் கணக்குப் படி எல்லாமே நடந்தால் ஒரு மினி soft power வல்லரசாக கட்டார் வலம் வரும் நிலை ஏற்படும். கரணம் தப்பினால் 220 பில்லியன் டாலர் சமாச்சாரம் உடனடி நஷ்டமாக மாத்திரமன்றி காலவோட்டத்தில் கட்டாரை அது தற்போதிருக்கும் நிலையை விட மிகவுமே கீழ்நோக்கிக் கொண்டு செல்லும் சூதாட்டமாகவும் மாற வாய்ப்புண்டு.

இதுவரை உலகக்கிண்ணத்தை நடாத்திய எந்த நாடும் எடுக்காத ரிஸ்கை கட்டார் எடுத்து பந்தயம் கட்டியிருக்கிறது. எனவே இதுவரை யாரும் இதன் மூலமாக எதிர்பார்க்காத அடைவொன்றை கட்டார் எதிர்பார்க்கிறது என தெளிவாக சொல்லிவிடலாம்.

மற்றபடி இதில் வேறு ஒரு புடலங்காயும் கிடையாது. மத மற்றும் கலாச்சார உள்ளீடுகள் கூட இந்த soft power gaining இற்கான முதலீடுகள் மாத்திரமே!

எல்லாவற்றுக்கும் மதவிளக்கம் வழங்கும் முட்டாள்தனத்தை விட எல்லாப் போட்டிகளையும் லீவு போட்டு விட்டு உட்கார்ந்து ஒரு மாதகாலம் பார்ப்பது எவ்வளவோ சிறந்தது.

கட்டார் ஒரு high risk high gain சூதாட்டத்தில் இறங்கியுள்ளது. காலம் பதில் சொல்லும். கட்டாருக்கு என்ன நடந்தாலும், Sports diplomacy என்பது எத்தனை முக்கியமான soft power கருவி என்பதை உலகம் கற்றுக்கொள்ளும்.

✍️✍️✍️ Affan Abdul Haleem

நிகழ்வுமேடை Nikalvumedai

Joint With நிகழ்வுமேடை Whatsapp Group.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top