Muslim History

சவூதியில் Tornado சூறாவளி …

சவூதியில் Tornado சூறாவளி ...

சவூதியின் Taif நகரத்தை அண்மித்த பகுதியில் Tornado வகைச் சூறாவளி தோன்றி மறைந்தமை, சவூதியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், Tornado வகைச் சூறாவளி சவூதியைப் பொறுத்தவரை புதியதொன்றாகும். பொதுவாக அமெரிக்காவில் Tornado வகை சூறாவளிகள் அவ்வப்போது பலத்த அழிவை ஏற்படுத்திச் செல்வதுண்டு. அத்தகைய Tornado வகைச் சூறாவளி சவூதியில் தோன்றி மறைந்திருப்பது சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிலோமீற்றர் அளவு விட்டமுடைய Tornado வகைச் சூறாவளி ஒன்று, ஒரு பிரதேசத்தை கடந்து செல்லுமாயின், காடொன்றை ஊடறுத்து புதிதாக பாதை அமைத்தது போன்று, அது பயணித்த இடத்தையெல்லாம் அப்படியே ஒன்றுமில்லாமல் சுத்தப்படுத்திச் சென்றுவிடும். அந்தளவுக்குப் பயங்கரமானது Tornado வகை சூறாவளியாகும்.

சவூதியில் தோன்றிய மினிச் சூறாவளியும் தனது பாதையில் உள்ள அனைத்து கற்கள் மற்றும் பாறைகளையும் நகர்த்திச் சென்றமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள் முதல் அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் குப்பைகளின் குவியல்கள் வரை சூறாவளி விட்டுச் சென்ற பேரழிவு சமூக வளைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் Hussein Al-Qahtani கூறுகையில், “தாயிஃபில் காணப்பட்ட வானிலை நிகழ்வு ஒரு சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டார்.

🎥 சவூதியின் Taif நகரத்தை அண்மித்த பகுதியில் தாக்கிய Tornado வகைச் சூறாவளி Video Clip ஐ பார்வையிட Click Here   🎥

– – – – – – – – – – – – – – – – – – –

முஸ்லிம் உலகின் செய்திகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள நிகழ்வுமேடை Whatsapp Group உடன் இணைந்திருங்கள்…

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top