News

அபிநந்தன் பிடிபட்ட போது என்ன நடந்தது?

அபிநந்தன் பிடிபட்ட போது என்ன நடந்தது?

பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்த இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் விங்கமான்டர் அபிநந்தன் கைது செய்யப்பட்டார். அவரது விமானம் சுடப்பட்டதையடுத்து, அவர் பராசூட்டில் நிலத்தை அடைந்தார்.

அவர் தரையிரங்கிய இடத்தில் ஏற்கனவே சில இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்களிடம் தான் இந்தியாவில் இருக்கிறேனா என்று அபிநன்தன் கேட்டுள்ளார். அவர்கள் பதில் கூறியவுடன், பாராசூட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

அப்போது அவர்களை பயமுறுத்த, தன் துப்பாக்கியை எடுத்து வானத்தை பார்த்து சுட்டார் அபிநந்தன். ஆனால், அந்த இளைஞர்கள் கோபமடைந்து கல்லைத் தூக்கி எறிய ஆரம்பித்தனர். அதனால், வானத்தை பார்த்து சுட்டுக் கொண்டே அவர் ஓடத் தொடங்கினார்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் ஓர் ஓடையில் குதித்தார். அப்போது இளைஞர்களில் ஒருவர், அவரது காலில் சுட்டார். அபிநந்தனை பார்த்து அவரது துப்பாக்கியை கீழே போடும்படி அவர் சொல்ல, அபிநந்தனும் அதை செய்தார்.

அப்போது ஓர் இளைஞர், அபிநந்தனை பிடித்தார். அப்போது தனது பாக்கெட்டில் இருந்த சில காகிதங்களை எடுத்து அபிநந்தன் கிழித்ததோடு, சிலவற்றை அவரது வாய்க்குள் அடைத்துக் கொண்டார். ஆனால், அந்த இளைஞர்கள், சில காகிதங்களை அவரிடம் இருந்து பறித்து, பின்பு அதனை ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.

தற்போது விங்கமான்டர் அபிநந்தனை விடுவிக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top