Muslim History

மத்திய ஆசியாவின் பெரிய பள்ளிவாசல்

மத்திய ஆசியாவின் பெரிய பள்ளிவாசல்
மத்திய ஆசியாவின் பெரிய பள்ளிவாசல்

Imam Sarakhsi பள்ளிவாசல் Kyrgyzstan னின் தலைநகரான Bishkek இல் செப்டம்பர் 2 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இப் பள்ளிவாசலே மத்திய ஆசியாவின் பெரிய பள்ளிவாசல் ஆகும். இப் பள்ளிவாசல் 30 ஆயிரம் பேரை உள்ளடக்கும் இட வசதியினை கொண்டமைந்துள்ளது.

மத்திய ஆசியாவைப் பொறுத்தவரை Kazakhstan, Kyrgyzstan, Tajikistan, Turkmenistan, Uzbekistan ஆகிய நாடுகள் மத்திய ஆசிய நாடுகள் என அழைக்கப்படுகின்றன. மத்திய ஆசியாவில் உள்ளடங்கும் நாடுகள் எவை என்பதில் கருத்து வேறுபாடுகளும் காணப்படுகின்றன.

“மத்திய ஆசியாவின் பெரிய பள்ளிவாசல் ஆக அமையப் பெற்ற இப் பள்ளிவாசல் நவீன கட்டிடக்கலையினை தழுவி மரபுவழி மாறாத அம்சத்தையுடையது” என துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan பள்ளிவாசல் திறப்பு விழாவில் குறிப்பிட்டார்.

இப் பள்ளிவாசலுக்கு 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் Sarakhsi இன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மத்திய ஆசியாவின் பெரிய பள்ளிவாசலான Imam Sarakhsi மஸ்ஜித் கட்டப்படுவதற்கு துருக்கி நிதிப் பங்களிப்பினை வழங்கியிருந்தது.

Kyrgyzstan நாட்டின் சமய நிறுவனங்களுக்கான அதிகார சபையினால் 35-acres நிலப்பரப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டில் மத்திய ஆசியாவின் பெரிய பள்ளிவாசலுக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

துருக்கிய மற்றும் உதுமானிய சாம்ராஜ்ய கலையம்ச சாயலை இப் பள்ளிவாசல் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய ஆசியாவின் பெரிய பள்ளிவாசல்

பள்ளிவாசலின் உட்பகுதி 7,500 சதுர மீற்றர் பரப்பளவுடையதாகும். ஒரே தடவையில் 9,000 பேர் தொழுகை நடாத்தக்கூடிய வசதியினை இப் பள்ளிவாசல் கொண்டமைந்துள்ளதோடு 30,000 பேர் பள்ளிவாசலின் உட்புற மற்றும் வெளிப்புற பகுதியில் ஒன்றுகூடும் அளவுக்கு இப் பள்ளிவாசல் இட வசதியினைக் கொண்டுள்ளது.

மத்திய ஆசியாவின் பெரிய பள்ளிவாசல் ஆகக் காணப்படும் இப் பள்ளிவாசல் தொழுகை அறைகளுக்குப் புறம்பாக Parking வசதியையும் கொண்டுள்ளது. அத்தோடு வகுப்பறைகள், இஸ்லாமிய கற்கைகளுக்கான மாநாட்டு மண்டபம் மற்றும் உணவு உண்ணும் அறை ஆகியவற்றினைக் கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மத்திய ஆசியாவின் பெரிய பள்ளிவாசல்

மத்திய ஆசியாவின் பெரிய பள்ளிவாசல்

68 மீற்றர்களுடைய 4 மினராக்களை இப் பள்ளிவாசல் கொண்டுள்ளது. ஒவ்வொரு மினராக்களும் தலா 3 balcony களைக் கொண்டுள்ளது.

சோவியத் ரஷ்யா வீழ்ச்சியுறும் வரைக்கும் Kyrgyzstan போன்ற நாடுகளில் பள்ளிவாசல்கள், மத நிறுவனங்கள் அமைக்கப் பெறுவதற்கு தடைகள் நிலவி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 75 % ஆன 6 மில்லியன் முஸ்லிம்கள் Kyrgyzstan வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top