Muslim History

மூதூரின் முதலாவது இலங்கை விமானப்படை அதிகாரி (Flight lieutenant) 

மூதூர்
மூதூரின் முதலாவது இலங்கை விமானப்படை அதிகாரி

மூதூர் பகுதியிலிருந்து முதலாவதாக இலங்கை விமானப்படை அதிகாரியாக ( Sri Lanka Air Force officer) த் தெரிவு செய்யப்பட்டவர் எம்.எம்.முஸ்னிப் அஹமட் (Flight Lieutenant) என்பவர் ஆவார்.

இவர் காலம்சென்ற முகம்மது முஸ்தபா மற்றும் பஸீரா தம்பதிகளின் புதல்வராக 1988-12-19 அன்று மூதூர் நொக்ஸ் வீதியில் பிறந்தார்.

தனது ஆரம்பக் கல்வியை மூதூர் மத்திய கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியை சம்மாந்துறை மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை மூதூர் மத்திய கல்லூரியிலுமாக தொடர்ந்தார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை விமானப்படையதிகாரி நியமனத்துக்கான பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் அதே ஆண்டு சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (Sir John Kotelawala Defence University) செல்லும் வாய்ப்பைப் பெற்று அங்கு சுமார் மூன்று வருடங்கள் கல்வி பயின்றார்.

பல்கலைக்கழக பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்த பின்னர் முதல் நியமனத்தோடு இரத்மலான விமான நிலையத்தில் (Rathmalana Air Force Base) இணைந்து சேவையாற்றிய இவர் கொழும்பு விமானப்படைத் தள நிலையம் (Colombo Air Force Station) மற்றும் புத்தளம் பாலாவி விமானப்படைத் தள நிலையம் (Palavi Air Force Station) போன்ற இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு சேவையாற்றி வருகின்றார்.

2013 ஆம் ஆண்டு BA in Defence Studies எனும் பட்டம் பெற்ற இவர் தற்போது தரமுயர்த்தப்பட்டு இலங்கை விமானப்படைத்தள நிருவாக உத்தியோகத்தராக பணியாற்றி வருகிறார்.

மிக சிறு வயதிலேயே விமானப்படை அதிகாரியாக தெரிவான எம்.எம்.முஸ்னிப் என்பவர் எதிர்காலங்களில் பல உயர் பதவிகளை அடைவதற்கான சாத்தியப்பாடுகள் அமைந்திருப்பதாக அறியும் இவ்வேலை இதுவரை காலமும் மூதூர் பகுதியிலிருந்து விமானப்படை அதிகாரிகளாக எம்.எம்.முஸ்னிப் (Flight Lieutenant) என்பவரைத்தவிர வேறு யாருமே தெரிவாகியிருக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு :-
எம்.எம்.மனாஸீர்(நத்வி)
நெய்தல் நகர்
மூதூர்-01
மூதூரின்_முதன்மைகள்-I (23)

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top