Muslim History

மூதூரில் முதன் முதலாக வெளிவந்த பாட நூல்

மூதூர்
மூதூரில் முதன் முதலாக வெளிவந்த பாட நூல்

மூதூர் பகுதியிலிருந்து முதன் முதலாக வெளி வந்த பாட நூல் எனும் சிறப்புக்குறிய நூலாக “இஸ்லாம்மதபோதினி” எனும் நூல் அமையப் பெற்றுள்ளது.

இது 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியிலேயே பாடசாலை பயிழும் சிரார்களுக்கான பாட போதனைகளை உள்ளடக்கிய சிறந்த நூலாகப் போற்றப்பட்டது.

இந்நூலின் ஆசிரியராக புகழ் பெற்ற நம் மூதூர் மண் ஈன்ற புலவர் எம். உமர் நெய்னா (உமர் ஐயா) அவர்கள் ஆவார்கள்.

இவர் மதார்சா மற்றும் ஆச்சும்மா தம்பதிகளின் இரண்டாவது புதல்வனாக 1907-12-08 அன்று மூதூர் குலத்தடித் தெரு (ஜாயா நகர்) எனுமிடத்தில் பிறந்து மூதூர் நெய்தல் நகர் எனும் பகுதியில் இறுதி வரை வாழ்ந்தார்.

மூதூர்

தனது ஆரம்பக் கல்வியை “அருளப்பு வாத்தியார்” எனும் ஆசிரியரிடத்தில் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் இணைந்து கற்று பின்னர் யாழ்ப்பாணத்திலும் நான்கு வருடங்கள் கற்று “தமிழ் இலக்கண வித்துவான்” பட்டம் பெற்றார்.

தனது சிறு வயது முதல் இலக்கிய வாண்மை கொண்ட புலவர் எம். உமர் நெய்னா ஐயா அவர்கள் மூதூரின் முதலாவது புலவரும் “கங்கைக் காவியத்தின்” கதாநாயகனுமாகிய சாலையர் (முஹியத்தீன் புலவர்) புலவர் உமர் நெய்னாரின் பாட்டனார் மீரிசாவின் உடன் பிறந்த சகோதரராவார். பாட்டனார் புலவர் சாலையரின் இலக்கிய கவியாற்றல் தன் பேரரான புலவர் நெய்னாருக்குக் கை மாரியதாக மூதூரில் கற்றறிந்தோர் கூறுவர்.

1939 ம் ஆண்டு அரசாங்க ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் மூதூர், தோப்பூர், சம்பூர் மற்றும் கிண்ணியா போன்ற பிரதேசங்களில் ஆசிரியராகக் கடமை புரிந்ததோடு இவர் ஒரு சிறந்த நாட்டு வைத்தியராகவும் திகழ்ந்தார்.

தமிழ் இலக்கிய, இலக்கண பண்டிதரான இவர் சீராப்புராணம் முழுவதையும் மனனமிட்டிருந்ததோடு பாடக் கூடியவராகவும் இருந்தார். அத்தோடு சைவ சமயப் புராணங்களும், தேம்பாவணியும் அவருக்குத் தெரிந்திருந்ததோடு 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் புலவர்களால் இயற்றப்பட்ட “யமகம்”,” திரிபு”,”மடக்கை” போன்ற பாடல்களையும் படித்து பொருள் சொல்லுமளவுக்கு திறமை வாய்ந்தவராகவும் காணப்பட்டார்.

மேலும் புலவர் எம். உமர் நெய்னா ஐயா அவர்கள் அன்றைய 3ம், 4ம் வகுப்பு முஸ்லிம் மாணவர்களுக்கான “இஸ்லாம் மத போதினி” எனும் பாட நூலை வெளியிட்டிருந்தார். இதனால் மூதூர் பகுதியிலிருந்து முதன் முதலாக வெளியிடப்பட்ட பாட நூல் எனும் பெருமைக்குரிய நூலாக இது அமைகிறது.

மேலும் புலவர் உமர் நெய்னார் தம் காலத்தில் ஊர் மக்களை அழைத்து அரங்கம் அமைத்து நபிகளாரின் வரலாறுகளைப் பரைசாட்டும் “சீராப்புராணத்தைப் பாடி” அவற்றுக்கான விளக்க உரைகளையும் கொடுத்து மக்களை நல் வழிப்படுத்தும் ஒரு சிறந்த ஆத்ம ஞானம் கொண்டவராகவும் இருந்ததோடு சீராப் புராணத்தில் இடம் பெறுகின்ற “பத்று படலம்” எனும் பகுதிக்கான பதவுரையை 1961 இல் சிரேஷ்ட பாடசாலை தராதர வகுப்பு மாணவர்களுக்காக எழுதிய வித்தகராகவும் திகழ்ந்தார்.

மேலும் இலக்கிய சேவைகளோடு சமமான சமூக சேவைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். மூதூர் கிழக்குப் பகுதியிலுள்ள “வேடன் கந்து” என அழக்கப்பட்ட பகுதிக்கு “நெய்தல் நகர்” எனும் பெயர் சூட்டியவரும் நெய்தல் நகர் பகுதியிலுள்ள ஹிழ்று ஜும்ஆ மஸ்ஜித் அமைப்பதற்காக தனது சொந்தக் காணியினை தர்மம் செய்தவராகவும் புலவர் உமர் நெய்னா ஐயா திகழ்கிறார்.

இவ்வாறு இலக்கியத் தொண்டரும் சமூக சேவையாளருமான புலவர் எம். உமர் ஐயா அவர்கள் “தமிழ்ச்சுனை” எனும் நூலை எழுதிக் கொண்டிருக்கையில் அந்நூல் முற்றுப் பெறாத நிலையில் 1963-11-12 அன்று தனது 56 வது வயதில் இறையடியெய்தினார்.

அன்னாரின் சேவைகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வதோடு உயர்தரமான சுவன பதியினை வழங்கி வைப்பானாக

தொகுப்பு:-
M.M.MANASEER (NATHWI)
NEITHAL NAGER
MUTUR-01

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

மேலும் எமது செய்திகளைப் பெற்றுக்கொள்ள..

நிகழ்வுமேடை Nikalvumedai

Joint With நிகழ்வுமேடை Whatsapp Group.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top